முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று (29) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் கோரிக்கையையடுத்து, கொழும்பு பிரதான நீதவான் கடந்த 20 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுத்திருந்தார்.
இதற்கிடையில் ராஜிதவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை திருத்தி இரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று (28) தீர்மானித்தது.
இந்நிலையில் குறித்த மனுவில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்ட இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அழைப்பாணை விடுக்குமாறு மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.








