Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஏறாவூரில் பழைய பாடசாலை அகமட் பரித் வித்தியாலய பகுதியில் ஆயுதங்களை தேடிய அகழ்வில் 4 கைக்குண்டுகள் மீட்பு-காணொளி

ஏறாவூரில் பழைய பாடசாலை அகமட் பரித் வித்தியாலய பகுதியில் ஆயுதங்களை தேடிய அகழ்வில் 4 கைக்குண்டுகள் மீட்பு-காணொளி

1 year ago
in காணொளிகள், செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

புதிய இணைப்பு

மட்டக்களப்பு ஓட்டுபள்ளிவாசல் பின்பகுதியல் உள்ள பழைய பாடசாலை காணியில் புதைக்கப்பட்டிருக்கும் ஆயுதங்களளை தேடி இன்று செவ்வாய்க்கிழமை (09) இராணுவ புலனாய்வு பிரிவினர், விசேட அதிரடிப்படையினர், பொலிசாருடன் இணைந்து அகழ்வு பணியை மேற்கொண்டதில் 4 கைக்குண்டுகளை மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

பொலன்னறுவை இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் ஏறாவூர் ஓட்டுபள்ளிவாசல் குறுக்கு வீதியில் பள்ளிவாசலுக்கு பின்பகுதியில் உள்ள முன்னாள் அகமட் பரீட் வித்தியாலய பகுதியில் அகழ்வதற்கான நீதிமன்ற உத்தரவை பெற்று சம்பவதினமான இன்று செவ்வாய்க்கிழமை ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் லியனகே தலைமையில் விசேட அதிரடிப்படையினர், இராணுவ புலனாய்வு பிரிவினர் இணைந்து பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அகழ்வு பணி இடம்பெற்றது.

இதன்போது அங்கு ஒரு பிளாஸ்ரிக் வாளியில் பொதி செய்யப்பட்டு புதைக்கப்பட்ட நிலையில் ஜே.ஆர் ரக 4 கைக்குண்டுகளை மீட்டனர். இவ்வாறு புதைக்கப்பட்ட வாளி யூஸ் கலவை பொதி செய்யப்பட்ட வாளி எனவும் இந்த யூஸ் கலவை 2012 உற்பத்தி செய்யப்பட்தாகவும் 2014 அதன் காலவதியாகயான வாளியில் 2012 க்கும் 2020 க்கும் இடைப்பட்ட காலத்தில் நிலத்தில் பாதுகாப்பாக புதைக்கப்ட்டிருப்பதாக பொலிசார் கண்டுபித்துள்ளனர்.

இதனை தொடரந்து அகழ்வு பணி நிறுத்தப்பட்டதுடன் மீட்கப்பட்ட கைக்குண்டுகளை விசேட அதிரடிப்படையின் கொண்டு சென்று சோதனையின் பின்னர் அதனை பாவிக்க முடியுமா அல்லது அழிக்க வேண்டுமா என தீர்மானித்த பின்னர் அது தொடர்பாக நீதிமன்றிற்கு அறிக்கை சமர்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசர் மேற்கொண்டு வருகின்றனர்.

முதல் இணைப்பு

ஏறாவூர் பழைய பாடசாலை காணியில் கைக்குண்டுகள் மீட்பு; தொடங்கப்பட்டது அகழ்வுப் பணி

மட்டக்களப்பு – ஏறாவூர் ஓட்டுப்பள்ளிக்கு அருகாமையில், உள்ள பழைய பாடசாலை ஒன்று அமைந்துள்ள காணியில் அகழ்வுப் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த அகழ்வுப் பணி, இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய, நீதிமன்ற உத்தரவை பெற்று இன்று(09.09.2025) தொடங்கப்பட்டுள்ளது.

பொலிஸ் பொறுப்பதிகாரி பிரசாத் லியனகே தலைமையில் இடம்பெற்ற இந்த அகழ்வுப் பணியில் நான்கு கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து, மேலும் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மஹிந்த ராஜபக்ஸவின் இல்லம் சென்ற புதிதாக பதவியேற்றுள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர்
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஸவின் இல்லம் சென்ற புதிதாக பதவியேற்றுள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர்

September 9, 2026
20 வருடங்களாக தோட்ட தொழிலாளர்கள் பெறவேண்டிய கொடுப்பனவு; நாளை முதல்
செய்திகள்

20 வருடங்களாக தோட்ட தொழிலாளர்கள் பெறவேண்டிய கொடுப்பனவு; நாளை முதல்

September 9, 2026
சத்துருக்கொண்டான் படுகொலையின் 36வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு
செய்திகள்

சத்துருக்கொண்டான் படுகொலையின் 36வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு

September 9, 2026
சொத்து விபரங்களை தாமதமாக சமர்ப்பிப்போருக்கு அபராதம்
செய்திகள்

சொத்து விபரங்களை தாமதமாக சமர்ப்பிப்போருக்கு அபராதம்

September 9, 2026
கிளிநொச்சி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

September 9, 2026
கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளருக்கு விளக்கமறியல்
செய்திகள்

கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளருக்கு விளக்கமறியல்

September 9, 2026
Next Post
தனது பெயர், புகைப்படத்தை அனுமதியின்றி பயன்படுத்த வேண்டாம் – உயர்நீதிமன்றம் சென்ற ஐஸ்வர்யா ராய்

தனது பெயர், புகைப்படத்தை அனுமதியின்றி பயன்படுத்த வேண்டாம் - உயர்நீதிமன்றம் சென்ற ஐஸ்வர்யா ராய்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.