Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பினாமிகளை வைத்து கையூட்டல் பெறும் அமைச்சர் சந்திரசேகர்; சபையில் சவால் விடுத்த அர்ச்சுனா

பினாமிகளை வைத்து கையூட்டல் பெறும் அமைச்சர் சந்திரசேகர்; சபையில் சவால் விடுத்த அர்ச்சுனா

11 months ago
in செய்திகள்

கடற்றொழில் அமைச்சில் இடம்பெறும் ஊழல் மோசடியை ஆதாரபூர்வமாக நிரூபித்தால் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பதவியை துறப்பாரா எனச் சவால் விடுத்த யாழ். மாவட்ட சுயேச்சைக் குழு பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தை சுட்டிக்காட்டி கடற்றொழில் அமைச்சு தொடர்பில் பல கேள்விகளை அமைச்சரிடம் முன்வைத்தார்.

முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இரண்டு வாரம் காலவகாசம் கோரினார்.

பாராளுமன்றத்தில் இன்று (11) நடைபெற்ற அமர்வின்போது நிலையியற் கட்டளை 27/2இன் கீழ் கேள்விகளை முன்வைத்து மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

வடக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சந்திரசேகர் கடற்றொழில் அமைச்சராக பதவி வகிப்பது மகிழ்ச்சிக்குரியது. கடற்றொழில் அமைச்சில் இடம்பெறும் மோசடிகள் தொடர்பில் பொதுமக்கள் பல முறைப்பாடுகளை முன்வைக்கிறார்கள். இருப்பினும் இந்த முறைப்பாடுகள் குறித்து தாங்கள் இதுவரையில் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்காமல் இருப்பது கவலைக்குரியது.

முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு இந்த உயரிய சபைக்கு ஆதாரபூர்வமான விடயங்களை முன்வைக்க முடியுமா, இல்லையென்றால் ஏன், இலங்கையில் உள்ள நீரியல் வளங்கள் தொடர்பான சட்டங்களில் கரைவலை மற்றும் சுருக்கு வலைகள் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது. தாங்கள் கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் இவ்விரு சட்டவிரோத செயற்பாடுகள் குறித்து எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என்பது பொதுமக்களின் முறைப்பாடு.

இந்த சட்டவிரோத செயற்பாடு தொடர்பில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடற்றொழில் அமைச்சின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் எத்தனை? இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளினால் மீனவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் எந்தவொரு மீனவ சங்கங்களுடன் கலந்துரையாடி உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டும் தங்களின் மீது சுமத்தப்பட்டுள்ளது.மீனவ சங்கங்களுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் எத்தனை, அந்த பேச்சுவார்த்தைகளினால் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் என்னவென்பதையும் இந்த சபைக்கு அறிவிக்க முடியுமா?

கரையோர பிரதேசங்களில் கடலட்டை பண்ணைகளுக்கு அனுமதி வழங்குவது கடற்றொழில் அமைச்சின் பிரதான பொறுப்பாகும். இதுவரையில் இதனை நியாயமான முறையில் தாங்கள் இதனை மேற்பார்வை செய்யவில்லை என்பது பொதுமக்களின் முறைப்பாடு. அமைச்சில் கையூட்டல் பெறப்படுகிறது என்பதும் பொதுமக்களின் முறைப்பாடு. தங்களின் பினாமிகளினால் இந்த கையூட்டல் பெறப்படுவதாக குறிப்பிடப்படுகிறது. அதற்குரிய ஆதாரங்களை நான் சபைக்கு சமர்ப்பித்தால் அதனை ஏற்றுக்கொண்டு தங்களால் நடவடிக்கை எடுக்க முடியுமா?

யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் மீன்பிடி இயக்குநரை தாங்கள் இடமாற்றம் செய்துள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. தாங்கள் அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடற்றொழில் அமைச்சின் பதவிகளில் இடம்பெற்ற மாற்றங்கள் என்னென்ன, முறையான நேர்காணல் இடம்பெற்றதா, முறையான வழிமுறைகள் பின்பற்றப்பட்டதா?

உங்களின் அமைச்சில் மோசடி இடம்பெறுவதை சுட்டிக்காட்டி சமூக வலைத்தளங்களில் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. அந்த காணொளியை நான் சபைக்கு சமர்ப்பித்து குற்றச்சாட்டை நிரூபிக்கிறேன். அதனை ஏற்றுக்கொண்டு அமைச்சு பதவியை விலக முடியுமா, மயிலிட்டி மற்றும் குறிகட்டுவான் பகுதியில் கடற்றொழில் அமைச்சினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திகள் என்ன அவற்றில் விபரத்தை சபைக்கு முன்வைக்க முடியுமா என கேள்வி எழுப்பினார்.

அதனைத் தொடர்ந்து எழுந்து உரையாற்றிய கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், இந்த கேள்விகளுக்கு பதிலளிக்க இரண்டு வாரங்கள் காலவகாசம் கோருகிறேன் என்றார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectionmattakkalappuseythikalpoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஈரானின் கொசுப்படையை பாராட்டிய ரஷ்ய ஜனாதிபதி புதின்!
செய்திகள்

ஈரானின் கொசுப்படையை பாராட்டிய ரஷ்ய ஜனாதிபதி புதின்!

July 29, 2026
அமெரிக்காவில் பரபரப்பு; மின்கம்ப உச்சியில் உயிரிழந்த கரடி!
உலக செய்திகள்

அமெரிக்காவில் பரபரப்பு; மின்கம்ப உச்சியில் உயிரிழந்த கரடி!

July 29, 2026
நாட்டின் பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு; கடற்பரப்புகளில் பலத்த காற்று குறித்து எச்சரிக்கை!
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு; கடற்பரப்புகளில் பலத்த காற்று குறித்து எச்சரிக்கை!

July 29, 2026
களு கங்கையில் சட்டவிரோத மாணிக்கக்கல், மணல் அகழ்வுக்கு அதிரடி முற்றுகை; 25 பேர் கைது
செய்திகள்

களு கங்கையில் சட்டவிரோத மாணிக்கக்கல், மணல் அகழ்வுக்கு அதிரடி முற்றுகை; 25 பேர் கைது

July 28, 2026
வன்னியின் பெருமையை உயர்த்திய பாபு மாஸ்டர்; 7ஆம் நிலைக் கறுப்புப்பட்டி அங்கீகாரம்!
செய்திகள்

வன்னியின் பெருமையை உயர்த்திய பாபு மாஸ்டர்; 7ஆம் நிலைக் கறுப்புப்பட்டி அங்கீகாரம்!

July 28, 2026
மலேசியாவில் சிக்கிய இலங்கை போதைப்பொருள் வலையமைப்பின் முக்கிய நபர்; ‘ரத்மலானே சைமா’ கைது!
செய்திகள்

மலேசியாவில் சிக்கிய இலங்கை போதைப்பொருள் வலையமைப்பின் முக்கிய நபர்; ‘ரத்மலானே சைமா’ கைது!

July 28, 2026
Next Post
பிரச்சினைகளை முன்னிறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டம் செய்யவுள்ள அரச வங்கி கூட்டு தொழிற்சங்க சம்மேளனம்

பிரச்சினைகளை முன்னிறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டம் செய்யவுள்ள அரச வங்கி கூட்டு தொழிற்சங்க சம்மேளனம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.