Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் புதிய தலைவராக ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் தெரிவு

அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் புதிய தலைவராக ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் தெரிவு

1 year ago
in செய்திகள்

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் (கோபா) புதிய தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவு செய்யப்பட்டார்.

அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் தலைவராகப் பணியாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் 2025.08.06ஆம் திகதி அப்பதவியை இராஜினாமாச் செய்ததையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும் நோக்கில் இன்றையதினம் (12) கூடிய அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இந்தத் தெரிவு இடம்பெற்றது.

தலைவர் பதவிக்கு பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிமின் பெயரை பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன வழிமொழிந்தார்.

இதனைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த புதிய தலைவர், அரசியல் கருத்துவேறுபாடுகள் இன்றி நடுநிலையாகச் செற்பட்ட, சகல உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் தனது பதவியை முன்னெடுத்துச் செல்ல எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டார்.

அத்துடன், முன்னாள் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் அவர்களின் பணிகளைப் பாராட்டியதுடன், அவர் மேற்கொண்ட பணியை தொடர்ச்சியாக எதிர்காலத்தில் இன்னும் சிறப்பாகச் செய்வதற்கு எதிர்பார்ப்பதாகப் புதிய தலைவர் குறிப்பிட்டார்.

புதிய திட்டங்களை வகுப்பதன் மூலம் கோபா குழுவின் பங்கை மேலும் நெறிப்படுத்தவும் பராமரிக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக இருப்பதாக புதிய தலைவர் மேலும் தெரிவித்தார்.

இந்தக் குழுக் கூட்டத்தில் பிரதியமைச்சர் சுதத் திலகரத்ன, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, ஜே.சி.அலவத்துவல, ரோஹித்த அபேகுணவர்தன, ஹெக்டர் அப்புஹாமி, சாமர சம்பத் தசநாயக்க, (வைத்தியர்) காவிந்த ஹேஷான் ஜயவர்தன, ஒஷானி உமங்கா, ருவன்திலக ஜயகொடி, (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்ஹ, எம். ஏ. எம். தாஹிர், லால் பிரேமநாத், சானக மாதுகொட ஆகியோரும், பாராளுமன்ற சட்டவாக்க சேவைகள் பணிப்பாளரும், தொடர்பாடல் பதில் பணிப்பாளருமான எம். ஜயலத் பெரேரா ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

1,000cc-க்கும் அதிகமான அதிசக்தி மோட்டார் சைக்கிள்களுக்கு அனுமதி வழங்க அரசாங்கம் பரிசீலனை!
செய்திகள்

1,000cc-க்கும் அதிகமான அதிசக்தி மோட்டார் சைக்கிள்களுக்கு அனுமதி வழங்க அரசாங்கம் பரிசீலனை!

November 4, 2026
ஒரே மாதத்தில் ரூ.423 கோடியால் அதிகரித்த கடனட்டை நிலுவைக் கடன்!
செய்திகள்

ஒரே மாதத்தில் ரூ.423 கோடியால் அதிகரித்த கடனட்டை நிலுவைக் கடன்!

November 4, 2026
காலிப் போத்தல்களின் உற்பத்திச் செலவு அதிகரிப்பை காரணம் காட்டி மதுபானங்களின் விலைகள் உயர்ந்தன!
செய்திகள்

காலிப் போத்தல்களின் உற்பத்திச் செலவு அதிகரிப்பை காரணம் காட்டி மதுபானங்களின் விலைகள் உயர்ந்தன!

November 4, 2026
ஏவுகணை சோதனைகளால் உலகை மிரள வைக்கும் வட கொரியா!
செய்திகள்

ஏவுகணை சோதனைகளால் உலகை மிரள வைக்கும் வட கொரியா!

November 4, 2026
அமெரிக்க தேர்தல் முடிவு குறித்து முன்னாள் ஜனாதிபதி ஒபாமா கருத்து!
செய்திகள்

அமெரிக்க தேர்தல் முடிவு குறித்து முன்னாள் ஜனாதிபதி ஒபாமா கருத்து!

November 4, 2026
நாமல் ராஜபக்ஷவைச் சந்திக்க பாராளுமன்றத்திற்கு வருகை தந்த பௌத்த பிக்கு!
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவைச் சந்திக்க பாராளுமன்றத்திற்கு வருகை தந்த பௌத்த பிக்கு!

November 4, 2026
Next Post
இந்தியர்களை இராணுவத்தில் சேர்ப்பதை நிறுத்த வேண்டும்; ரஷ்யாவிற்கு இந்தியா வலியுறுத்தல்

இந்தியர்களை இராணுவத்தில் சேர்ப்பதை நிறுத்த வேண்டும்; ரஷ்யாவிற்கு இந்தியா வலியுறுத்தல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு