வட்டேகம நகர சபையின் முன்னாள் தலைவர் ரவீந்திர பண்டாரா மற்றும் தொழிலதிபர் லக்ஷித மனோஜ் வீரபாகு ஆகியோர் சட்டவிரோத வாகன இறக்குமதி மற்றும் பதிவுத் திட்டத்தில் தொடர்புடையதாகக் கூறி கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டதாகவும், போக்குவரத்து திணைக்களத்தில் போலியான விபரங்களுடன் பதிவு செய்யப்பட்டதாகவும் சந்தேகிக்கப்படும் இரண்டு ஜீப் வாகனங்களும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
விவரங்களை போலியாக பதிவுசெய்தல் மற்றும் பொய்யான பதிவு ஆவணங்கள் தொடர்பான விசாரணைகளின் பின்பே வட்டேகம நகர சபையின் முன்னாள் தலைவர் பண்டாரா மற்றும் வீரபாகு கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








