Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
புலமைப்பரிசில் பரீட்சை நாளை; 2 இலட்சத்து 94 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தோற்றவுள்ளனர்!

புலமைப்பரிசில் பரீட்சை நாளை; 2 இலட்சத்து 94 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தோற்றவுள்ளனர்!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

2026ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாளை (09) நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் 2,723 பரீட்சை மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ள இந்தப் பரீட்சைக்கு 2,94,089 மாணவர்கள் தோற்றவுள்ளனர்.

இவர்களில் 2,20,366 மாணவர்கள் சிங்கள மொழியிலும், 73,723 மாணவர்கள் தமிழ் மொழியிலும் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளை நடத்துவதற்கான கால அவகாசம் ஓகஸ்ட் 5ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ளது.

அத்துடன், பரீட்சை நிறைவடையும் வரை அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் பரீட்சை தொடர்பான விளம்பரங்களை வெளியிடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் மன ஒருமைப்பாட்டுடன் பரீட்சையை எதிர்கொள்ளும் வகையில், பரீட்சை ஆரம்பிப்பதற்கு குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக பரீட்சை நிலையங்களுக்கு வருகை தருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பரீட்சையின் இரண்டாம் வினாத்தாள் காலை 9.30 மணி முதல் 10.45 மணி வரை நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து சிறிய இடைவேளைக்குப் பின்னர், முதலாவது வினாத்தாள் காலை 11.15 மணி முதல் நண்பகல் 12.15 மணி வரை நடைபெறும்.

மேலும், கையடக்கத் தொலைபேசிகள், நுண்ணறிவுக் கடிகாரங்கள், குறிப்புகள் உள்ளிட்ட எந்தவொரு இலத்திரனியல் சாதனங்களையும் பரீட்சை மண்டபத்திற்குள் கொண்டு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தளப் பதிவுகள்; அர்ச்சுனா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வழக்கு!
செய்திகள்

வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தளப் பதிவுகள்; அர்ச்சுனா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வழக்கு!

September 22, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகள்; 9 பேர் விடுதலை!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகள்; 9 பேர் விடுதலை!

September 22, 2026
சவூதியில் தண்டனை எதிர்கொள்ளும் சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த சீலரத்ன தேரர்!
செய்திகள்

சவூதியில் தண்டனை எதிர்கொள்ளும் சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த சீலரத்ன தேரர்!

September 22, 2026
சட்டவிரோத பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!
செய்திகள்

சட்டவிரோத பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!

September 22, 2026
மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது!
செய்திகள்

மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது!

September 22, 2026
தமிழ் தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மட்டக்களப்பு மாணவி!
செய்திகள்

தமிழ் தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மட்டக்களப்பு மாணவி!

September 22, 2026
Next Post
சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு இடமாற்றம்; தேசிய பொலிஸ் ஆணைக்குழு ஒப்புதல்!

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு இடமாற்றம்; தேசிய பொலிஸ் ஆணைக்குழு ஒப்புதல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு