Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பேசாலையில் புதர் பகுதியில் 41 வயதுடைய மீனவர் சடலமாக மீட்பு!

பேசாலையில் புதர் பகுதியில் 41 வயதுடைய மீனவர் சடலமாக மீட்பு!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பேசாலை பொலிஸ் பிரிவின் பேசாலை 8ஆம் வட்டாரத்தில் உள்ள புதர் பகுதியிலிருந்து இன்று (07) மதியம் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் சடலம் ஒன்று இருப்பதை அவதானித்த அப்பகுதி மக்கள், கிராம உத்தியோகத்தர் ஊடாக உடனடியாக பேசாலை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற பேசாலை பொலிஸார் சடலத்தை மீட்டதுடன், மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகளில் உயிரிழந்தவர் பேசாலை 8ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 41 வயதுடைய லோரன்ஸ் மோரிஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர், மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்தவர் எனவும், சடலம் மீட்கப்பட்ட இடத்திலிருந்து சிறிது தொலைவில் அவரது வீடு அமைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவரது தொலைபேசி தொடர்பு நேற்று (06) காலை 7.30 மணிக்குப் பின்னர் கிடைக்கவில்லை என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, சம்பவ இடத்துக்கு வருகை தந்த குற்றத்தடுப்பு தடயவியல் பொலிஸாரின் உதவியுடன் பேசாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சடலம் மீட்கப்பட்டமைக்கான காரணம் மற்றும் உயிரிழப்புக்கான காரணத்தை கண்டறியும் நோக்கில் பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தளப் பதிவுகள்; அர்ச்சுனா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வழக்கு!
செய்திகள்

வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தளப் பதிவுகள்; அர்ச்சுனா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வழக்கு!

September 22, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகள்; 9 பேர் விடுதலை!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகள்; 9 பேர் விடுதலை!

September 22, 2026
சவூதியில் தண்டனை எதிர்கொள்ளும் சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த சீலரத்ன தேரர்!
செய்திகள்

சவூதியில் தண்டனை எதிர்கொள்ளும் சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த சீலரத்ன தேரர்!

September 22, 2026
சட்டவிரோத பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!
செய்திகள்

சட்டவிரோத பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!

September 22, 2026
மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது!
செய்திகள்

மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது!

September 22, 2026
தமிழ் தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மட்டக்களப்பு மாணவி!
செய்திகள்

தமிழ் தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மட்டக்களப்பு மாணவி!

September 22, 2026
Next Post
வத்தளையில் பிறந்தநாள் விழாவில் துப்பாக்கிச்சூடு; முக்கிய துப்பாக்கிதாரி உட்பட மூவர் கைது!

வத்தளையில் பிறந்தநாள் விழாவில் துப்பாக்கிச்சூடு; முக்கிய துப்பாக்கிதாரி உட்பட மூவர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு