Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வத்தளையில் பிறந்தநாள் விழாவில் துப்பாக்கிச்சூடு; முக்கிய துப்பாக்கிதாரி உட்பட மூவர் கைது!

வத்தளையில் பிறந்தநாள் விழாவில் துப்பாக்கிச்சூடு; முக்கிய துப்பாக்கிதாரி உட்பட மூவர் கைது!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

வத்தளை, கதிரான பகுதியில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவின்போது ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய துப்பாக்கிதாரி உள்ளிட்ட மேலும் மூன்று சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த ஜூலை 23ஆம் திகதி இரவு, கதிரான பள்ளியவத்தை பகுதியில் அமைந்துள்ள மண்டபமொன்றில் பிறந்தநாள் விழா நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, காரில் வந்த இனந்தெரியாத குழுவினர் அங்கு கலந்துகொண்டிருந்த நபர் ஒருவர் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவினர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் ஒத்துழைப்புடன் முன்னெடுத்த தீவிர விசாரணைகளின் அடிப்படையில், நேற்றைய தினம் (07) குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் நேரடியாக துப்பாக்கிச்சூடு நடத்தியவர், தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட காரை செலுத்திய சாரதி மற்றும் சந்தேகநபர்கள் தலைமறைவாக இருப்பதற்கு புகலிடம் வழங்கி உதவியவர் ஆகியோர் அடங்குகின்றனர்.

இவர்கள் ஜிந்துப்பிட்டி, மாத்தளை மற்றும் கடுவெல பகுதிகளைச் சேர்ந்த 26, 35 மற்றும் 36 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ‘குடு ரொஷான்’ என்பவரை இலக்கு வைத்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. எனினும், இலக்கு தவறியதால் அவருக்கு அருகில் நின்றிருந்த நபர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய இரு பெண்கள் உள்ளிட்ட நால்வர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தளப் பதிவுகள்; அர்ச்சுனா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வழக்கு!
செய்திகள்

வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தளப் பதிவுகள்; அர்ச்சுனா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வழக்கு!

September 22, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகள்; 9 பேர் விடுதலை!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகள்; 9 பேர் விடுதலை!

September 22, 2026
சவூதியில் தண்டனை எதிர்கொள்ளும் சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த சீலரத்ன தேரர்!
செய்திகள்

சவூதியில் தண்டனை எதிர்கொள்ளும் சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த சீலரத்ன தேரர்!

September 22, 2026
சட்டவிரோத பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!
செய்திகள்

சட்டவிரோத பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!

September 22, 2026
மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது!
செய்திகள்

மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது!

September 22, 2026
தமிழ் தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மட்டக்களப்பு மாணவி!
செய்திகள்

தமிழ் தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மட்டக்களப்பு மாணவி!

September 22, 2026
Next Post
புலமைப்பரிசில் பரீட்சை நாளை; 2 இலட்சத்து 94 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தோற்றவுள்ளனர்!

புலமைப்பரிசில் பரீட்சை நாளை; 2 இலட்சத்து 94 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தோற்றவுள்ளனர்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு