காஸா மீதான இஸ்ரேல் இராணுவத்தின் நடவடிக்கைகள் விரிவாக்கம் செய்யப்படுவதால், அங்கு வசிக்கும் பலஸ்தீனர்கள் உடனடியாக வெளியேற வேண்டுமென இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது.
காஸா நகரத்தின் மீது, நேற்று (15) நள்ளிரவு முதல் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, ஹமாஸ் அமைப்பின் கட்டமைப்புகளை அழிப்பதற்காக, காஸா மீதான இராணுவ நடவடிக்கைகள் அதிகரிக்கப்படுவதாக, இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து, இஸ்ரேலின் செய்தித்தொடர்பாளர் அவிசாய் அட்ரீ கூறுகையில், காஸா மீதான இஸ்ரேலின் நடவடிக்கைகள் இன்று காலை முதல் விரிவாக்கம் செய்யப்படுவதாகக் கூறியுள்ளார்.
முன்னதாக, காஸா மீதான நடவடிக்கைகள் அதிகரிக்கப்படும் எனவும் அங்குள்ள மக்கள் வெளியேற வேண்டுமெனவும், கடந்த ஒரு மாதமாகவே இஸ்ரேல் அரசாங்கம் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வந்தமையும் குறிப்பிடத்தக்கது.








