Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஏறாவூர் பிரதேசத்தில் மட்பாண்ட உற்பத்தியாளர்கள் களிமண் பெற்றுத்தருமாறு கோரிக்கை!

ஏறாவூர் பிரதேசத்தில் மட்பாண்ட உற்பத்தியாளர்கள் களிமண் பெற்றுத்தருமாறு கோரிக்கை!

10 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேச சபை பிரிவில் மட்பாண்ட குடிசைக் கைத்தொழில் தொழில் செய்பவர்களுக்கான களி மண்ணை பெறுவதில் பாரிய சவால் உள்ளதாகவும் ஏறாவூர் பற்று பிரதேச சபை ஊடாக களி மண்ணை கொண்டு வருவதற்கான முறையான அனுமதியை பெற்று தருமாறு சிரேஸ்ட ஊடகவியலாளரும் ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினருமான செ.நிலாந்தனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேச சபை பிரிவில் உள்ள ஐயன்கேணி மணியபுரம் கிராமத்தில் உள்ள மட்பாண்டம் செய்யும் குடும்பங்களுக்கான நிதி உதவிகளை வழங்கி வைத்த போதே மேற்படி கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

ஐயன்கேணி மணியபுரம் கிராமத்தில் மட்பாண்ட செய்யும் 30 குடும்பங்களுக்கான வட்டி அற்ற கடன் உதவிகள் சேவகம் தொண்டு நிறுவனத்தின் ஊடாக வழங்கி வைக்கப்பட்டது.

ஏற்கனவே 15 குடும்பங்களுக்கான கடனுதவிகள் வழங்கி வைக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் பிரான்ஸ் துளிர் அமைப்பின் நிதி உதவியில் சேவகம் நிறுவனத்தின் ஊடாக மேலும் 15 குடும்பங்களுக்கான கடனுதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இதன் போது கருத்து தெரிவித்த மட்பாண்ட உற்பத்தியாளர்கள்,

தங்களது மாதாந்த வாழ்வாதாரத்திற்கான கைத்தொழிலாக நாங்கள் மட்பாண்டங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறோம்.

ஆனால் எமது தொழிலை தொடர்ச்சியாக செய்ய முடியாத நிலை உள்ளது. காரணம் எங்களால் தொடர்ச்சியாக களி மண்ணை பெற்றுக் கொள்ள முடியாமல் உள்ளது.

களிமண்ணை கொண்டு வந்து தருபவர்கள் தற்போது களிமண் ஏற்ற அனுமதி இல்லை என்றும் தெரியாமல் ஏற்றிவருவதாக கூறி களிமண்ணின் விலைகளை அதிகரித்து விட்டனர் அத்துடன் நல்ல களிமண்ணை அவர்கள் கொண்டுவருவதில்லை இதனால் எமது தொழில் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி தொழில் செய்ய முடியாத நிலையில் உள்ளோம்.

எனவே ஏறாவூர் பற்று பிரதேச சபை ஊடாக களி மண்ணை பெற்றுக் கொள்வதற்கான அனுமதியை பெற்று தருமாறு கேட்டுக் கொள்கின்றோம். என தெரிவித்தனர்.

இன் நிகழ்வில் சிரேஸ்ட ஊடகவியலாளரும் ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினருமான செ.நிலாந்தன் மேற்படி உதவிகளை வழங்கி வைத்ததோடு. இன் நிகழ்வில் சேவகம் தொண்டு நிறுவனத்தின் செயலாளர் த.தர்சன், பொருளாளர் கு.சுபோஜன், உறுப்பினர் அ.ஜெயராஜ், வர்த்தகரும் சமுகசேவகருமான உமா சேகரன் மற்றும் நாகபூசணி அம்மன் ஆலய செயலாளர் சுதர்சன் மட்பாண்ட உற்பத்தியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை; சென்னை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
உலக செய்திகள்

நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை; சென்னை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

July 23, 2026
அக்காலத்தில் போருக்கு ஆட்கள் சேர்த்துக்கொடுத்த இந்த அரசாங்கம் தமிழர்களுக்கு தீர்வு தராது-சுரேஸ்பிரேமச்சந்திரன்
காணொளிகள்

அக்காலத்தில் போருக்கு ஆட்கள் சேர்த்துக்கொடுத்த இந்த அரசாங்கம் தமிழர்களுக்கு தீர்வு தராது-சுரேஸ்பிரேமச்சந்திரன்

July 23, 2026
கடலில் இருந்து ஏவுகணை ஏவி சீனா புதிய வரலாறு; 9 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில்!
செய்திகள்

கடலில் இருந்து ஏவுகணை ஏவி சீனா புதிய வரலாறு; 9 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில்!

July 23, 2026
வெளிநாட்டு வேலை தேடுபவர்களுக்கு மகிழ்ச்சி; 2.5 இலட்சம் வேலைவாய்ப்புகள் இலக்கு!
செய்திகள்

வெளிநாட்டு வேலை தேடுபவர்களுக்கு மகிழ்ச்சி; 2.5 இலட்சம் வேலைவாய்ப்புகள் இலக்கு!

July 23, 2026
கைது தடைக் கோரி தாக்கல் செய்த மனு; மேன்முறையீட்டு நீதிமன்றில் கோட்டாபய ராஜபக்ஷ ஆஜர்
செய்திகள்

கைது தடைக் கோரி தாக்கல் செய்த மனு; மேன்முறையீட்டு நீதிமன்றில் கோட்டாபய ராஜபக்ஷ ஆஜர்

July 23, 2026
மட்டு மேயர் சுகாதார பரிசோதகர்களை வைத்து தன்னை அச்சுறுத்துவதாக அந்தனிசில் ராஜ்குமார் குற்றச்சாட்டு
காணொளிகள்

மட்டு மேயர் சுகாதார பரிசோதகர்களை வைத்து தன்னை அச்சுறுத்துவதாக அந்தனிசில் ராஜ்குமார் குற்றச்சாட்டு

July 23, 2026
Next Post
மட்டக்களப்பில் சுகாதார சேவையை வலுப்படுத்தும் நோக்குடன் 39 புதிய வைத்தியர்கள் நியமனம்

மட்டக்களப்பில் சுகாதார சேவையை வலுப்படுத்தும் நோக்குடன் 39 புதிய வைத்தியர்கள் நியமனம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு