Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் சில பொலிஸார் கப்பம் வாங்கிவிட்டு சட்டவிரோத மண் அகழ்விற்கு துணைபோகின்றனர்; இரா. துரைரெட்ணம்

மட்டக்களப்பில் சில பொலிஸார் கப்பம் வாங்கிவிட்டு சட்டவிரோத மண் அகழ்விற்கு துணைபோகின்றனர்; இரா. துரைரெட்ணம்

10 months ago
in காணொளிகள், செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு சில பொலிஸ்காரர்கள் கப்பம் வாங்கும் வரைக்கும் சட்டவிரோத மண் அகழ்வை தடுத்து நிறுத்த வாய்ப்புக்கள் இல்லை எனவே அப்படிப்பட்ட பொலிஸ்காரர்களை இனம் கண்டு, அவர்களை உடனடியாக இடமாற்றம் செய்து, எதிர்காலத்தில் சட்டம் ஒழுங்கை அமுல்படுத்தி சட்டவிரோத மண் அகழ்வை தடுத்து நிறுத்த புதிய அரசு செயற்படவேண்டும் என ஈ.பி.ஈர்.எல்.எப் மத்திய குழு உறுப்பினரும் கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினருமான இரா. துரைரெட்ணம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு ஈ.பி.ஆர்.எல். எப். கட்சி காரியாலயத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (16) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மாவட்டத்தில் வெல்லாவெளி, கொக்கட்டிச்சோலை, செங்கலடி, வவுணதீவு, கிரான், வாழைச்சேiனை ,வாகரை பிரதேச செயலகப் பிரிவின் கீழ் உள்ள பிரதேசங்களில் நீர்பாசனத் திணைக்களத்துடன் சம்மந்தப்பட்ட பெரிய ஆறுகள் வாய்க்கால்கள் உள்ளன.

இதில் பெரிய ஆறுகள் ஊடாக கிளை வாய்க்கால்களில் குறித்த பிரதேச செயலகப்பிரிவிலுள்ள பிரதேசங்களில் இரவு நேரங்களில் சனி, ஞாயிற்றுக்கழமை உட்பட அனைத்து தினங்களிலும் மண் மாபியாக்களின் செயற்பாடு கடந்த காலங்களில் அதிகரித்த வண்ணம் இருந்தன. அதை கட்டுப்படுத்துவதற்கு சட்டம் ஒழுங்கை கடைபிடிப்பவர்கள் மட்டுமல்ல நீர்பாசன திணைக்களத்துக்கும் அந்த பங்கு இருக்கின்றது. அதுமட்டுமல்ல ஒரு சில விவசாய அமைப்புக்களும் மண் அழ்வதற்கான கடிதங்களையும் வழங்கியுள்ளது.

இந்த திணைக்களங்கள் மாவட்டத்தில் சுற்று சூழல் தொடர்பாக அறிக்கை வழங்கும் திணைக்களம், பிரதேச செயலகம் மற்றும் மண்ணுடன் சம்மந்தப்பட்ட திணைக்களங்கள் இந்த சட்டவிரோத மண் அகழ்வை கட்டுப்படுத்த முடியும். ஆனால் விசேட அதிரடிப்படை, பொலிஸ், இராணுவம் தலையிட்டு மண்மாபியாக்களை கட்டுப்படுத்தும் நிலை மாறியிருக்கின்றது

எமது மாவட்டம் கடற்கரையை அண்டிய பகுதி எனவே இந்த மண் அகழ்வை தடுத்து நிறுத்தாதபட்சத்தில் பல கிராமங்கள் வெள்ளத்தினால் அள்ளுண்டு செல்லக் கூடிய அபாயனரமான நிலமைகள் தோற்று விக்கப்பட்டிருக்கின்றதுடன் விவசாய செய்கை முழுமையாக பாதிப்படைய கூடிய சூழ்நிலைகள் இருக்கின்றது

செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பல மண் மேடுகள் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது. ஆகவே கடந்த காலத்தில் மௌனமாக இருந்த பல திணைக்களங்கள் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுகின்ற பொலிசார் திணைக்கள தலைவர்கள் இந்த மண்மாபியாக்களை தடுத்து நிறுத்துவதற்கு உரிய நடவடிக் கையை மேற்கொள்ளவேண்டும்.

அதேவேளை மாவட்டத்தில் கப்பம் வாங்கும் சில பொலிஸ்காரர்கள் இருக்கும் வரை சட்டவிரோத மண் அகழ்வை தடுத்து நிறுத்த முடியாது எனவே அப்படிப்பட்ட பொலிஸ்காரர்களை இனம் கண்டு அவர்களை உடனடியாக இடமாற்றம் செய்து எதிர்காலத்தில் சட்டம் ஒழுங்கை அமுல்படுத்தி மண் அகழ்வை தடுத்து நிறுத்த புதிய அரசு செயற்படவேண்டும் என்றார்.

Tags: BattinaathamnewselectioninternationalnewspoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கல்லடி மெதடிஸ்த திருச்சபையின்18ஆவது ஆண்டு விழா
செய்திகள்

கல்லடி மெதடிஸ்த திருச்சபையின்18ஆவது ஆண்டு விழா

July 26, 2026
வாழைத்தோட்டம் புனித ஸ்தேவான் மெதடிஸ்த திருச்சபையின் புதிய ஆலய திறப்பு விழா
செய்திகள்

வாழைத்தோட்டம் புனித ஸ்தேவான் மெதடிஸ்த திருச்சபையின் புதிய ஆலய திறப்பு விழா

July 26, 2026
1200cc வரையிலான உயர் திறன் மோட்டார் சைக்கிள்களுக்கு நாட்டில் அனுமதி வழங்க கோரும் நாமல்
செய்திகள்

1200cc வரையிலான உயர் திறன் மோட்டார் சைக்கிள்களுக்கு நாட்டில் அனுமதி வழங்க கோரும் நாமல்

July 26, 2026
ஜனாதிபதி செயலகத்தின் 26 வாகனங்கள் தொடர்பில் தகவல் இல்லை
செய்திகள்

ஜனாதிபதி செயலகத்தின் 26 வாகனங்கள் தொடர்பில் தகவல் இல்லை

July 26, 2026
திருகோணமலையில் பலத்த காற்று வீசும் என அறிவிப்பு
செய்திகள்

திருகோணமலையில் பலத்த காற்று வீசும் என அறிவிப்பு

July 26, 2026
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் 1,025 இறக்குமதி வாகனங்கள் முடக்கம்; ஏலம் அல்லது டெண்டர் மூலம் விற்பனைக்கு நடவடிக்கை
செய்திகள்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் 1,025 இறக்குமதி வாகனங்கள் முடக்கம்; ஏலம் அல்லது டெண்டர் மூலம் விற்பனைக்கு நடவடிக்கை

July 26, 2026
Next Post
மட்டக்களப்பில் 13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்; குற்றவாளிக்கு 7 வருட கடூழிய சிறைத் தண்டனை

மட்டக்களப்பில் 13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்; குற்றவாளிக்கு 7 வருட கடூழிய சிறைத் தண்டனை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.