Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
களுவாஞ்சிகுடியில் பிரதான தபாலகத்திற்கான புதிய கட்டிட அடிக்கல் நடும் நிகழ்வு

களுவாஞ்சிகுடியில் பிரதான தபாலகத்திற்கான புதிய கட்டிட அடிக்கல் நடும் நிகழ்வு

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள்

இந்த நாட்டில் கொள்ளையுகம் பூர்த்தியாகவும், மக்களின் அனைத்துவிதமான நன்மைகளையும் பூர்த்திசெய்யும் விதமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த நிலைமையினை மாற்றுவதற்கு முன்னெடுக்கப்படும் முயற்சிகளை மக்கள் முறியடிப்பார்கள் எனவும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்தகால யுத்தசூழ்நிலையின்போது கைவிடப்பட்டிருந்த களுவாஞ்சிகுடி பிரதான தபாலகத்திற்கான புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று (18) நடைபெற்றது.

கடந்தகாலத்தில் பல்வேறு தரப்பினரிடமும் குறித்த கட்டிடத்தினை அமைத்துதருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளபோதிலும் இதுவரையில் அமைக்கப்படாத நிலையில் சுமார் 35வருடத்திற்கு பின்னர் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதற்கான வேலைத்திட்டத்தினை ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பிரதம அதிதியாக கலந்து கொண்டு புதிய கட்டிட நிர்மாணப்பணியை ஆரம்பித்துவைத்தார்.

சுமார் 30 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டினை களுவாஞ்சிகுடி பிரதான தபால் நிலையத்தினை அமைப்பதற்கு தபால் திணைக்களம் ஒதுக்கீடுசெய்துள்ளது.

இந்த நிகழ்வில் தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு , கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெந்தலால் ரத்னசேகர, மண்முனை தென் எருவில் பற்று தவிசாளர் மே.வினோராஜ், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் யு.உதயசிறிதர், பிரதி அஞ்சல் மா அதிபர் உசித்த உலங்கமே, கிழக்கு மாகாண பிரதி தபால் மா அதிபர் சி.பிரகாஷ், மற்றும், அரச உயர் அதிகாரிகள், தபால் நிணைக்கள அதிகாரிகள், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalsrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அனோஜனுக்கு ஆதரவாக ஹட்டனில் கொட்டும் மழையிலும் ஆர்ப்பாட்டம்!
செய்திகள்

அனோஜனுக்கு ஆதரவாக ஹட்டனில் கொட்டும் மழையிலும் ஆர்ப்பாட்டம்!

September 20, 2026
48 கடவுச்சீட்டுகளை வைத்திருந்த நபர் ஒருவர் கைது!
செய்திகள்

48 கடவுச்சீட்டுகளை வைத்திருந்த நபர் ஒருவர் கைது!

September 20, 2026
பல பிரதான ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு; பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
செய்திகள்

பல பிரதான ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு; பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

September 20, 2026
அனோஜனை விடுதலை செய்யக் கோரி கல்முனையில் கவனயீர்ப்பு போராட்டம்!
செய்திகள்

அனோஜனை விடுதலை செய்யக் கோரி கல்முனையில் கவனயீர்ப்பு போராட்டம்!

September 20, 2026
நாவலப்பிட்டியில் மகாவலி கங்கை பெருக்கெடுப்பு; 100 குடும்பங்கள் இடம்பெயர்வு!
செய்திகள்

நாவலப்பிட்டியில் மகாவலி கங்கை பெருக்கெடுப்பு; 100 குடும்பங்கள் இடம்பெயர்வு!

September 20, 2026
அனோஜனுக்கு மன்னிப்புப் பெற்றுக்கொடுக்க இராஜதந்திர மட்டத்தில் உச்சபட்ச நடவடிக்கை; விஜித ஹேரத்!
செய்திகள்

அனோஜனுக்கு மன்னிப்புப் பெற்றுக்கொடுக்க இராஜதந்திர மட்டத்தில் உச்சபட்ச நடவடிக்கை; விஜித ஹேரத்!

September 20, 2026
Next Post
தெஹிவளையில் சீனப் பிரஜை ஒருவரின் சடலம் மீட்பு

தெஹிவளையில் சீனப் பிரஜை ஒருவரின் சடலம் மீட்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு