Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஐநா வதிவிடப் பிரதிநிதியிடம் தமிழ் மக்களின் கையொப்பங்கள் கையளிப்பு!

ஐநா வதிவிடப் பிரதிநிதியிடம் தமிழ் மக்களின் கையொப்பங்கள் கையளிப்பு!

11 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஐநாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி மார்க் அண்ட்ரே பிரான்சேவிடம் அனைத்து தமிழ்த் தேசியக் கட்சிகளும் ஒன்றிணைந்து கையெழுத்துப் போராட்டத்தில் பெற்றுக் கொண்ட கையொப்பங்கள் இன்று (23) கொழும்பில் கையளிக்கப்பட்டன.

இன்று (23) மாலை 3:30 மணியளவில் கொழும்பில் உள்ள ஐநா அலுவலகத்தில் இச்சந்திப்பு நடைபெற்றது.

இக்கையொப்பங்களுடன் தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்கள் ஒன்றிணைந்து கையொப்பமிட்ட கடித வரைவும் கையளிக்கப்பட்டது.

தமிழ் தேசிய கட்சிகளின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ செல்வம் அடைக்கலநாதனும், சமத்துவ கட்சியின் செயலாளர் நாயகம் சந்திரகுமார், கட்சிகளின் ஒருங்கிணைப்பாளரான குருசுவாமி சுரேந்திரனும் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.

ஐநா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கு எழுதப்பட்டு ஐநா செயலாளர் நாயகத்துக்கும் பாதுகாப்பு சபைக்கும் மனித உரிமைகள் பேரவையின் அங்கத்துவ நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் பிரதி செய்யப்பட்டுள்ள இக்கடிதத்தில் நீதியரசர் சீ.வீ. விக்னேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சார்பில் செ. கஜேந்திரன், செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், முருகேசு சந்திரகுமார் மற்றும் எஸ். நவீந்திரா (வேந்தன்) ஆகியோர் கையொப்பம் இட்டு இருந்தனர்.

காலம் காலமாக தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அட்டூழிய குற்றங்களுக்கான நீதியை விரைந்து நிலை நாட்டவும், பிரதானமாக செம்மணி உட்பட எமது வடக்கு கிழக்கு தாயகத்தில் அடையாளப்படுத்தப்படும் மனிதப் புதைகுழிகளில் தொடர்ந்தும் அகழ்வுப் பணிகளை முன்னெடுக்கவும், கண்டெடுக்கப்படும் ஆதாரங்களை உறுதிப்படுத்துவும் சர்வதேச மேற்பார்வையுடன் கூடிய ஆலோசனே, தொழில்நுட்பம், நிதி, பாதுகாப்பு என பல கோரிக்கைகள் இக்கடிதத்தில் உள்ளடங்கியிருந்தன.

அவற்றை நேரடியாகவும் ஐநா ஒருங்கிணைப்பாளரிடம் இச்சந்திப்பின்போது தமிழ் மக்களின் பிரதிநிதிகளால் வலியுறுத்தப்பட்டன. கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாக நடந்த இச்சந்திப்பு கையெழுத்து ஆவணங்களையும் கடிதப் பிரதியையும் கையளித்ததுடன் முடிவு பெற்றது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

அதிகபட்ச சில்லறை விலையை மீறி அரிசி விற்பனை; இரண்டு கடைகளுக்கு ரூ.3 இலட்சம் அபராதம்!
செய்திகள்

அதிகபட்ச சில்லறை விலையை மீறி அரிசி விற்பனை; இரண்டு கடைகளுக்கு ரூ.3 இலட்சம் அபராதம்!

August 9, 2026
சிறு கடனாளிகளுக்கு கடும் சட்டம்; பெரும் கடனாளிகளுக்கு ஏன் சலுகை? – பாராளுமன்றத்தில் சாணக்கியன் கேள்வி
செய்திகள்

சிறு கடனாளிகளுக்கு கடும் சட்டம்; பெரும் கடனாளிகளுக்கு ஏன் சலுகை? – பாராளுமன்றத்தில் சாணக்கியன் கேள்வி

August 9, 2026
தமிழர் அரசியல் பேரவையில் இணையுமாறு கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு ரவூப் ஹக்கீம் அழைப்பு
அரசியல்

தமிழர் அரசியல் பேரவையில் இணையுமாறு கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு ரவூப் ஹக்கீம் அழைப்பு

August 9, 2026
ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஓமான் ஒப்பந்தம் மட்டும் போதாது; ஈரான்
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஓமான் ஒப்பந்தம் மட்டும் போதாது; ஈரான்

August 9, 2026
சாவகச்சேரி பிரதான சாலையில் அமைந்துள்ள வேப்பமரங்களை வெட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை
செய்திகள்

சாவகச்சேரி பிரதான சாலையில் அமைந்துள்ள வேப்பமரங்களை வெட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை

August 9, 2026
போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் சுதந்திரக்கட்சியின் தொகுதி தலைவர் கைது
செய்திகள்

போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் சுதந்திரக்கட்சியின் தொகுதி தலைவர் கைது

August 9, 2026
Next Post
அமரர் திலீபனின் 38 ஆம் ஆண்டு நினைவு ஊர்தி பவனியின் போது பட்டாசுகளை கொழுத்திய இளைஞன் கைது

அமரர் திலீபனின் 38 ஆம் ஆண்டு நினைவு ஊர்தி பவனியின் போது பட்டாசுகளை கொழுத்திய இளைஞன் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு