Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு போதனா வைத்தியசாலை மலசல கூடத்தில் குழந்தையை பிரசவித்து பெட்டிக்குள் அடைத்த சிற்றூழியர்; குழந்தை உயிரிழப்பு

மட்டு போதனா வைத்தியசாலை மலசல கூடத்தில் குழந்தையை பிரசவித்து பெட்டிக்குள் அடைத்த சிற்றூழியர்; குழந்தை உயிரிழப்பு

12 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை பிரிவில் உள்ள மலசல கூடத்தில் குழந்தையை பிரசவித்து அதனை, கட்டிலின் கீழ் மறைத்து வைத்திருந்த அங்கு கடமையாற்றி வரும் 35 வயதுடைய 2 பிள்ளைகளின் தாயான சுகாதார சிற்றூழியர் ஒருவரை நேற்று முன்தினம் (23) பொலிஸார் கைது செய்துள்ளதுடன், உயிரிழந்த நிலையில் குழந்தை மீட்கப்பட்ட சம்பவத்தையடுத்து பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

இது பற்றி தெரியவருவதாவது,

குறித்த வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை பிரிவில் கடமையாற்றி வரும் சிற்றூழியரான பெண் திருமணம் முடித்து இரண்டு பிள்ளைகளின் தாயாரான இவர் சம்பவ தினம் திங்கட்கிழமை (22) வழமைபோல வைத்தியசாலையில் கடமையாற்றி வந்துள்ளார்.

இதன் போது அவருக்கு வயிறு வலிப்பதாக அங்குள்ள மலசல கூடத்திற்கு சென்று ஒருவருக்கும் தெரியாமல் பெண் குழந்தை ஒன்றை பிரசவித்து அதனை பெட்டி ஒன்றில் மூடி கட்டிலின் கீழ் மறைத்து வைத்துவிட்டு அங்கு கடமையாற்றி வந்துள்ளார்.

இந்த நிலையில் அவருக்கு இரத்த போக்கு அதிகரித்ததையடுத்து அவரை அவதானித்த தாதியர் ஒருவர் அவரை வார்டில் அனுமதித்த நிலையில் அவரை சோதனை செய்த வைத்தியர்கள், அவர் குழந்தை பெற்றுள்ளதை கண்டறிந்து கொண்டதையடுத்து கொண்டனர்.

இந்த நிலையில் பெற்றெடுத்த குழந்தையை பெட்டி ஒன்றில் போட்டு மூடி, கட்டிலின் கீழ் மறைத்து வைக்கப்பட்ட குழந்தை உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டதுடன், குறித்த சிற்றூழியரின் கணவரும் அந்த வைத்தியசாலையில் சிற்றூழியராக கடமையாற்றி வருவதாகவும், கணவருக்கும் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட மன கசப்பு காரணமாக கணவனை கடந்த ஜூன் மாதத்தில் இருந்து பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் இந்த நிலையில் குறித்த பெண் கர்ப்பம் தரித்து முழுமையாக 38 வாரங்கள் கொண்ட 2 கிலோவும் 485 கிராம் நிறை கொண்ட பெண் குழந்தையை பிரசவித்துள்ளார்.

அவர் கர்ப்பிணியாக இருப்பது அங்கு கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் எவருக்கும் தெரியாது எனவும் இந்த நிலையில் அவர் குழந்தையை உயிருடன் பிரசவித்து பெட்டியில் போட்டு மறைத்து வைத்திருப்பதாகவும் கணவனுக்கு தான் அந்த குழந்தை பிறந்ததாகவும், கணவர் இரண்டாவது பிள்ளை தனக்கு பிறக்கவில்லை என அடிக்கடி தெரிவித்து வந்ததாகவும் பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதேவேளை குழந்தையின் மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக கொழும்பு பகுப்பாய்வு திணைக்களத்துக்கு அனுப்பியுள்ளதாகவும் உயிரிழந்த குழந்தை தனக்கு பிறக்கவில்லை என பிரிந்துள்ள கணவன் தெரிவித்ததையடுத்து, குழந்தையின் மற்றும் தந்தையுடைய இரத்த மாதிரியை பெற்று டி.என்.ஏ. பரிசோதனை நடத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சாவகச்சேரி வைத்தியசாலைக்கு சகல வசதிகளுடன் கூடிய மருந்தகம்!
செய்திகள்

சாவகச்சேரி வைத்தியசாலைக்கு சகல வசதிகளுடன் கூடிய மருந்தகம்!

September 18, 2026
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு; விமல் வீரவங்ச தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்க பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவு!
செய்திகள்

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு; விமல் வீரவங்ச தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்க பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவு!

September 18, 2026
பணிப்புறக்கணிப்பு நடுவேயும் பெரும்பாலான ரயில் சேவைகள் வழமைபோல் இயக்கம்; புகையிரத திணைக்களம்!
செய்திகள்

பணிப்புறக்கணிப்பு நடுவேயும் பெரும்பாலான ரயில் சேவைகள் வழமைபோல் இயக்கம்; புகையிரத திணைக்களம்!

September 18, 2026
வாகன விலைகள் கணிசமாகக் குறைவு; இறக்குமதியாளர்கள் சங்கம் தகவல்!
செய்திகள்

வாகன விலைகள் கணிசமாகக் குறைவு; இறக்குமதியாளர்கள் சங்கம் தகவல்!

September 18, 2026
நாமல் ராஜபக்ஷ மீண்டும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில்!
செய்திகள்

நாமல் ராஜபக்ஷ மீண்டும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில்!

September 18, 2026
மட்டக்குளி விபத்து – “கார் தானாகவே வேகம் அதிகரித்தது” என ஓட்டுநர் வாதம்!
செய்திகள்

மட்டக்குளி விபத்து – “கார் தானாகவே வேகம் அதிகரித்தது” என ஓட்டுநர் வாதம்!

September 18, 2026
Next Post
அனுராதபுரம் பிரதான வீதியில் அதிகாலை ஏற்பட்ட கோர விபத்து; மூவர் பலி

அனுராதபுரம் பிரதான வீதியில் அதிகாலை ஏற்பட்ட கோர விபத்து; மூவர் பலி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.