Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஜனாதிபதி – ஜப்பான் பிரதமர் சந்திப்பு

ஜனாதிபதி – ஜப்பான் பிரதமர் சந்திப்பு

10 months ago
in செய்திகள்

ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை வரவேற்கும் நிகழ்வு இன்று (29) ஜப்பான் பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது.

ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா ஜனாதிபதிக்கு மரியாதை அணிவகுப்புடன் சிறப்பு வரவேற்பு அளித்ததுடன், இருநாட்டு பிரதிநிதிகள் அறிமுகப்படுத்தப்பட்டனர். பின்னர் இருதரப்பினருக்கிடையில் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.

இந்த சந்திப்பில் வர்த்தகம், முதலீடு, பொருளாதார ஒத்துழைப்பு, அபிவிருத்தி உதவி மற்றும் வலய பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் கூட்டாண்மையை விரிவுபடுத்துவது குறித்துப் பேசப்பட்டது. பால் உற்பத்தித் துறையை மேம்படுத்தும் திட்டம் மற்றும் பாதுகாப்பு உதவி தொடர்பான ஒப்பந்த ஆவணங்கள் இதன்போது கையொப்பமிடப்பட்டன.

கூட்டு ஊடகச் சந்திப்பில் ஜப்பான் பிரதமர் இஷிபா, இந்தியப் பெருங்கடலில் முக்கிய இடமாக உள்ள இலங்கையின் அபிவிருத்தி மற்றும் ஸ்திரத்தன்மை மிக அவசியம் எனவும், இருநாடுகளுக்கிடையிலான கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த விருப்பதாகவும் தெரிவித்தார்.

ஜனாதிபதி திசாநாயக்க உரையாற்றியபோது, இலங்கை-ஜப்பான் நட்பு பரஸ்பர நம்பிக்கை மற்றும் கௌரவத்தின் அடிப்படையில் நீண்டகாலமாக வலுவடைந்துள்ளது என்றும், அபிவிருத்தி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான பயணத்தில் ஜப்பானுடன் இணைந்து பணியாற்ற இலங்கை அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

மேலும், கடந்த பொருளாதார நெருக்கடியால் நிறுத்தப்பட்ட 11 அபிவிருத்தித் திட்டங்களை மீளத் தொடங்க ஜப்பான் வழங்கிய உதவிக்கும், சர்வதேச நாணய நிதி மறுசீரமைப்பு திட்டத்தில் வழங்கிய ஆதரவுக்கும் நன்றி தெரிவித்தார்.

சந்திப்பு முடிவில் இருதரப்பினராலும் கூட்டு அறிக்கை வெளியிடப்பட்டது.

இந்த நிகழ்வில் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத், ஜப்பானுக்கான இலங்கை தூதுவர் பேராசிரியர் பிவிதுரு ஜனக் குமாரசிங்க, ஜனாதிபதியின் ஆலோசகர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மட்டு பாலமீன்மடுவில் குடிநீர், மலசல கூடம் மற்றும் மின்சாரம் இன்றி வாழ்ந்து வரும் 30 குடும்பங்கள்
காணொளிகள்

மட்டு பாலமீன்மடுவில் குடிநீர், மலசல கூடம் மற்றும் மின்சாரம் இன்றி வாழ்ந்து வரும் 30 குடும்பங்கள்

July 30, 2026
காட்டன் – தலவாக்கலை வீதியில் இரு அரச பேருந்துகள் மோதி விபத்து!
செய்திகள்

காட்டன் – தலவாக்கலை வீதியில் இரு அரச பேருந்துகள் மோதி விபத்து!

July 30, 2026
மாமாங்கேஸ்வரர் ஆலய மஹோற்சவத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாநகர சபையினால்  சிரமதானம்!
காணொளிகள்

மாமாங்கேஸ்வரர் ஆலய மஹோற்சவத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாநகர சபையினால் சிரமதானம்!

July 30, 2026
பக்தி வெள்ளத்தில் நிறைவுற்ற தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய தீர்த்தோற்சவம்
காணொளிகள்

பக்தி வெள்ளத்தில் நிறைவுற்ற தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய தீர்த்தோற்சவம்

July 30, 2026
கோரகல்லிமடு கணேசா விளையாட்டுக் கழகத்திற்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு
காணொளிகள்

கோரகல்லிமடு கணேசா விளையாட்டுக் கழகத்திற்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

July 30, 2026
நடுத்தர வருமான குடும்பங்களுக்கு புதிய வீடுகள்; 85% நிர்மாணப் பணிகள் நிறைவு!
செய்திகள்

நடுத்தர வருமான குடும்பங்களுக்கு புதிய வீடுகள்; 85% நிர்மாணப் பணிகள் நிறைவு!

July 30, 2026
Next Post
இஸ்ரேல் தாக்குதலில் 66,000 பலஸ்தீனர்கள் உயிரிழப்பு

இஸ்ரேல் தாக்குதலில் 66,000 பலஸ்தீனர்கள் உயிரிழப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.