Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நவம்பர் மாத இறுதிக்குள் பேருந்துகளில் பெண் நடத்துனர்கள்!

நவம்பர் மாத இறுதிக்குள் பேருந்துகளில் பெண் நடத்துனர்கள்!

11 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களாக பெண்கள் நவம்பர் மாத இறுதிக்குள் பணியமர்த்தப்படுவார்கள் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க பாராளுமன்றத்தில் புதன்கிழமை (08) தெரிவித்தார்.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சின் நிதியொதுக்கீட்டை நிறைவேற்றுவதற்கான விவாதத்தைத் தொடங்கி வைத்து அமைச்சர் இவ்வாறு கூறினார்.

நவம்பர் மாத இறுதிக்குள் பெண் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பணியமர்த்தப்படுவார்கள். மெட்ரோ பேருந்து சேவையையும் தொடங்குவோம். பேருந்து டிக்கெட்டுகள் மோசடி செய்யப்படுவது அனைவரும் அறிந்த உண்மை. எனவே, அட்டை கட்டண முறையை நிறுவ கோரிக்கை விடுக்கப்பட்டது.

தற்போதுள்ள பேருந்து டிக்கெட் இயந்திரங்கள் வங்கி அட்டைகள் மூலம் பணம் செலுத்துவதற்கான வசதிகளுடன் நவம்பர் 30 ஆம் திகதிக்குள் வழங்கப்படும். பொது பயணிகள் போக்குவரத்து இன்னும் மோசமான நிலையில் உள்ளது. அதைத் தீர்க்க அனைவரும் உதவுமாறு அமைச்சர் கூறினார்.

மேலும் போக்குவரத்து அமைச்சர் ஊடகங்களைப் பொறுப்புடன் செய்தி வெளியிட வலியுறுத்தினார்,

கம்பளை தொலுவ பகுதியில் நடந்த ஒரு பயங்கர விபத்தில் மூன்று பெண்கள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஒரு செய்தித்தாளில் வெளியான கட்டுரையை மேற்கோள் காட்டி, போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க,

ஊடகங்கள் மிகவும் பொறுப்புடன் செய்திகளை வெளியிட வேண்டும் என பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

“விபத்து குறித்து செய்தி வெளியிடுவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், அந்த செய்தியில், பெண் ஓட்டுநர் பிரேக் பதிலாக ஆக்ஸிலரேட்டரை அழுத்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது,” என அமைச்சர் செய்தித்தாள் கட்டுரையை மேற்கோள் காட்டி தெரிவித்தார்.

“இது ஓட்டுநர் ஒரு பெண்ணாக இருந்ததால் நடந்ததல்ல. இது எந்த ஓட்டுநருக்கும் நடக்கலாம். பெண்களை இந்தத் துறையில் பணியமர்த்த முயற்சிக்கும் இந்த நேரத்தில், ஊடகங்கள் இதுபோன்ற சம்பவங்களை ‘ஓட்டுநர்’ என்று மட்டும் குறிப்பிட வேண்டும்.

‘பெண் ஓட்டுநர்’ அல்லது ‘ஆண் ஓட்டுநர்’ என்று பாலின வேறுபாடு குறிப்பிடுவது தவறான புரிதலை ஏற்படுத்தும்,” என்று அவர் கூறினார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மன்னார் கடற்பரப்பில் வலையில் சிக்கிய 300 கிலோ எடையுடைய பிரமாண்ட மீன்!
செய்திகள்

மன்னார் கடற்பரப்பில் வலையில் சிக்கிய 300 கிலோ எடையுடைய பிரமாண்ட மீன்!

September 14, 2026
நாட்டின் பல பகுதிகளில் வீதி விபத்துகள்; ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு!
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் வீதி விபத்துகள்; ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு!

September 14, 2026
லேபிள் இல்லாத தடுப்பூசிகள்; சீனாவுக்கே திருப்பி அனுப்பியதாக அமைச்சர் தெரிவிப்பு!
செய்திகள்

லேபிள் இல்லாத தடுப்பூசிகள்; சீனாவுக்கே திருப்பி அனுப்பியதாக அமைச்சர் தெரிவிப்பு!

September 14, 2026
பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து எம்.எஸ். அப்துல் வாஹித் இராஜினாமா!
செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து எம்.எஸ். அப்துல் வாஹித் இராஜினாமா!

September 14, 2026
இந்தியாவிடமிருந்து எரிபொருள் வாங்கும் உக்ரைன்
உலக செய்திகள்

இந்தியாவிடமிருந்து எரிபொருள் வாங்கும் உக்ரைன்

September 14, 2026
சர்வதேச விலை உயர்வு; செப்டம்பர் இறுதியில் எரிபொருள் விலையில் மாற்றம்?
செய்திகள்

சர்வதேச விலை உயர்வு; செப்டம்பர் இறுதியில் எரிபொருள் விலையில் மாற்றம்?

September 14, 2026
Next Post
செங்கலடியில் கர்ப்பிணி தாய்களின் போசாக்கு திறனை மேம்படுத்துவதற்கு ஆரையம்பதியில் முருங்கை மரக்கன்றுகள் வழங்கிவைப்பு

செங்கலடியில் கர்ப்பிணி தாய்களின் போசாக்கு திறனை மேம்படுத்துவதற்கு ஆரையம்பதியில் முருங்கை மரக்கன்றுகள் வழங்கிவைப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு