நாட்டிலுள்ள 10 மாவட்டங்களுக்கு கடுமையான மின்னல் தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வுத் மையம் அறிவித்துள்ளது.
அதன்படி, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் முல்லைத்தீவு, வவுனியா, மாத்தளை மாவட்டங்களுக்கு மின்னல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று(9) இரவு 11.00 மணி வரை, 10 மாவட்டங்களுக்கு இந்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் 15 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.








