மின்சார சபை (CEB) தொழிற்சங்கங்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பாக வாய்மொழி ஒப்பந்தங்களுக்கு எழுத்துப்பூர்வ உறுதிப்பாடுகள் கிடைத்துள்ளன என்பதையடுத்து, தாங்கள் முன்னெடுத்து வந்த சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தை இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளன.
அதிகாரப்பூர்வ தகவலின்படி, நேற்று (13) மின்சார அமைச்சர் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. அந்த சந்திப்பில் சில ஒப்பந்தங்கள் எட்டப்பட்டன என தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அரசாங்கம் மின்சார சபையை நான்கு முக்கிய பிரிவுகளாகப் பிரித்து மறுசீரமைக்க தீர்மானித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, கடந்த சில வாரங்களாக CEB ஊழியர்கள் இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.








