Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அந்த ராஜபக்ஷ நான் அல்ல; திட்டவட்டமாக மறுக்கும் கோட்டா பய

அந்த ராஜபக்ஷ நான் அல்ல; திட்டவட்டமாக மறுக்கும் கோட்டா பய

11 months ago
in செய்திகள்

கதிர்காமம் மெனிக் ஆற்றுக்கு அருகில் கட்டப்பட்ட கட்டிடம் தனக்குச் சொந்தமானது என்று ஊடகங்களில்
செய்தி வெளியாகி வருவதை அவதானிக்க முடிந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.

அந்தக் கட்டிடத்துக்கு மின்சாரம் பெறுவதற்கு “ஜி. ராஜபக்க்ஷ” என்ற பெயரில் ஒரு விண்ணப்பம் மட்டுமே சமர்ப்பிக்கப்பட்டதாகவும், அந்த விண்ணப்பத்தில் முறையான கையொப்பம் இல்லை என்றும் முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்க்ஷ கூறுகிறார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தனது பேஸ்புக் கணக்கில் இட்டுள்ள ஒரு பதிவில்,

கதிர்காமம் மெனிக் ஆற்றுக்கு அருகில் வேறொருவரால் கட்டப்பட்ட கட்டிடம் என்னுடையது என்று தவறாகக் கூறும் ஒரு செய்தி அவ்வப்போது ஊடகங்களில் வெளியிடப்படுவதை அவதானிக்க முடிந்தது.

நேற்று (13) சில தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான செய்திகளில் அந்தக் கட்டிடத்தைக் குறிப்பிடும்போது எனது பெயர் மீண்டும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்தக் கட்டிடத்தின் உரிமை குறித்து கடந்த காலத்தில் சிஐடியினால் விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணை தொடர்பாக நானும் ஒரு வாக்குமூலம் அளித்தேன்.

அந்தக் கட்டிடத்துக்கு மின்சார இணைப்பு பெறுவதற்காக “ஜி. ராஜபக்க்ஷ” என்ற நபரின் பெயரில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பம் மட்டும் தொடர்பிலேயே என்னிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

விண்ணப்பத்தில் முறையான கையொப்பம் இல்லை. கையொப்பம் இருக்க வேண்டிய இடத்தில் படிக்க முடியாத ஓர் எழுத்து இருந்தது.

மெனிக் ஆற்றுக்கு அருகில் உள்ள கட்டிடம் என்னுடைய சொத்து அல்ல என்பதை நான் திட்டவட்டமாகக் கூற விரும்புகிறேன்.

கதிர்காமப் பகுதியில் எந்தவொரு கட்டிடத்தையும் கட்டவோ பராமரிக்கவோ எனக்கு எந்த காரணமோ விருப்பமோ இருந்ததில்லை என்பதையும் கூற வேண்டும்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தளப் பதிவுகள்; அர்ச்சுனா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வழக்கு!
செய்திகள்

வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தளப் பதிவுகள்; அர்ச்சுனா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வழக்கு!

September 22, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகள்; 9 பேர் விடுதலை!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகள்; 9 பேர் விடுதலை!

September 22, 2026
சவூதியில் தண்டனை எதிர்கொள்ளும் சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த சீலரத்ன தேரர்!
செய்திகள்

சவூதியில் தண்டனை எதிர்கொள்ளும் சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த சீலரத்ன தேரர்!

September 22, 2026
சட்டவிரோத பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!
செய்திகள்

சட்டவிரோத பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!

September 22, 2026
மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது!
செய்திகள்

மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது!

September 22, 2026
தமிழ் தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மட்டக்களப்பு மாணவி!
செய்திகள்

தமிழ் தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மட்டக்களப்பு மாணவி!

September 22, 2026
Next Post
சஷீந்திர ராஜபக்ஷவும் பிணையில் விடுதலை

சஷீந்திர ராஜபக்ஷவும் பிணையில் விடுதலை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு