Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கலவரம் என்று காட்டி சிறையில் வைத்து குட்டிமணி உட்பட 53 தமிழ் இளைஞர்கள் படுகொலை

கலவரம் என்று காட்டி சிறையில் வைத்து குட்டிமணி உட்பட 53 தமிழ் இளைஞர்கள் படுகொலை

9 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

1983 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறை சலையில் 53 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டமை சிறையில் ஏற்பட்ட கலவரம் அல்ல சிறைக்கு வெளியில் ஒரு வாரத்துக்கு முன் அப்போதைய ஜனாதிபதி ஜே ஆரின் மருமகனான இராணுவ தளபதி திஸ்ஸ வீரதுங்கவினால் திட்டமிட்ட படுகொலை நிகழ்வு என சிங்கள எழுத்தாளரும் முன்னாள் ஊடகவியலாளருமான நந்தன வீரரட்ன யாழில் தெரிவித்தார்.

கடந்த சனிக்கிழமை தந்தை செல்வா நினைவு அரங்கில் இடம் பெற்ற கறுப்பு ஜூலையின் 7 நாட்கள் என்ற நூல் வெளியீட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் 1983 காலப்பகுதியில் ஊடகவியலாளராக செயற்பட்டு கொண்டிருந்தேன் 1993 காலப்பகுதியில் வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்தேன்.

வட மாகாணம் இலங்கை இராணுவத்தின் பிடியிலும் இந்திய அமைதிப்படையின் பிடியிலும் , விடுதலைப் புலிகளின் பிடியிலும் இருந்த போது தெற்கு அறிக்கை இடுவதற்காக வருகை தந்தேன்.
அன்றைய நாட்கள் தெற்கு ஊடக தணிக்கைகள் காரணமாக தமிழ் பேசும் மக்களின் உண்மையான தகவல்கள் தெற்கில் திரிவுபடுத்தப்பட்டு வந்தது.

அதற்காக சுமார் 40 வருடங்கள் காத்திருந்து 2013 ஆம் ஆண்டு யாழ்ப்பாண தீயிடல் என்ற நூலை சிங்கள மொழியில் புலனாய்வு அறிக்கையிடல் மூலம் எழுதினேன்.

இதை ஏன் நான் சிங்கள மொழியில் எழுதினேன் என்றால் யாழ்ப்பாண பொது நூலகம் ஏன் எரிக்கப்பட்டது யாரால் எரிக்கப்பட்டது என்ற உண்மை நான் புத்தகம் எழுதும் வரை பலருக்கு தெரியாது.

யாழ்ப்பாண தீயிடல் என்ற நூல் ஒரு மாதத்தில் பத்தாயிரம் பிரதிகள் சிங்கள மக்களிடம் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்னும் குறித்த நூலுக்கான சிங்கள வாசகர்கள் அதிகமாக கேட்கின்ற நிலையில் எங்களால் உடனடியாக அச்சிட்டு வழங்க முடியாத நிலை காணப்படுகிறது.

தற்போது கறுப்பு ஜூலையில் ஏழு நாட்கள் என்ற நூலை யாழ்ப்பாணத்தில் இரண்டு மொழிகளிலும் வெளியிட்டுள்ளேன்.

இந்த நூலில் கறுப்பு ஜூலையில் சூத்திரதாரிகள் யார் யாருக்காக தமிழ் மக்களை கொன்றொழித்தார்கள் உண்மையில் வெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகளுக்குள் ஏற்பட்ட முரண்பாடா கலவரத்தின் பின்னணி , வெலிக்கடை சிறைச்சாலைக்கு தமிழ் இளைஞர்கள் எவ்வாறு கொண்டுவரப்பட்டார்கள் போன்ற பல புலனாய்வு தகவல்களை ஆதாரத்துடன் எழுதியுள்ளேன்.

அனேகமானவர்கள் இன்றும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள் 1983 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலைக்குள் கைதிகளுக்குள் ஏற்பட்ட முரண்பாடு தான் குட்டிமணி உட்பட 53 தமிழ் இளைஞர்கள் கொல்லப்பட்டமைக்கு காரணம் என.

உண்மை அது அல்ல. நான் அக்காலப் பகுதியில் வெளிக்கடை சிறைச்சாலையின் பிரதம சிறை காவலரை நேரடியாக வாக்குமூலம் பெற்றேன்.

1983 யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்ட நிலையில் அவர்களின் பூத உடலை கொழும்புக்கு எடுத்துச் சென்று கலவரத்திற்கான திட்டத்தை ஜே ஆர் வகுத்தார்.
வெலிக்கடை சிறைச்சாலையில் குட்டிமணி உட்பட 53 தமிழ் இளைஞர்கள் கொல்லப்பட்டமை சிறையில் ஏற்பட்ட கலவரம் அல்ல ஒரு வாரத்துக்கு முன்னதாக நன்கு திட்டமிட்ட கொலை முயற்சி.

1981 அப்போதைய ஜனாதிபதி ஜே ஆர் இன் மருமகனான இராணுவ தளபதி திஸ்ஸ வீரதூங்கவை ஜேஆர் யாழ்ப்பாணம் அனுப்பி வைக்கிறார் ஒரு வாரத்துக்குள் பயங்கரவாதத்தை அழித்து வரும் படி.

ஆனால் வீர துங்கவினால் அழிக்க முடியவில்லை; அதற்கு பலி வாங்கும் நோக்குடன் வட மாகாணத்தில் பல்வேறு இடங்களில் கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்களை இராணுவ முகங்களுக்குள் அடைத்து வைத்திருந்தார்கள்.

அவர்களை வெலிக்கடை சிறைச்சாலைக்குள் கொண்டுவருமாறு உத்தரவு வழங்கப்பட்ட நிலையில் பல்வேறு இடங்களிலும் இராணுவ முகங்களில் தடுத்து வைக்கப்பட்ட தமிழ் இளைஞர்கள் ஓரிரு நாட்களுக்குள் வெளிக்கடை சிறைச்சாலைக்குள் கொண்டுவரப்பட்டனர்.

நான்கு திட்டமிட்டபடி தண்டனை பெற்ற சிங்கள கைதிகளை பணயமாக வைத்து அவர்களுக்கு விடுதலை தருவதாக கூறி குட்டிமணி உட்பட 53 தமிழ் இளைஞர்களை படுகொலை செய்தார்கள்.

இந்தப் படுகொலையுடன் தொடர்புபட்ட அத்தனை சிங்கள கைதிகளும் சிறையில் இருந்து அதன் பின்னர்
ஜே ஆர் அரசாங்கத்தினால் விடுவிக்கப்பட்டனர்.

1987 ஆம் ஆண்டு 23ஆம் திகதி ஆரம்பித்த தமிழ் மக்களுக்கு எதிரான இனக் கலவரம் ஏழு நாட்கள் நீடித்தது.
30 ஆயிரத்துக்கு மேற்பட்ட அப்பாவி தமிழ் மக்கள் கொன்று வீசப்பட்டார்கள். கொழம்பு மற்றும் புறநகர் பகுதிகளில் தமிழ் வர்த்தகர்களுடைய கடைகள் வீடுகள் தீயிட்டு அழிக்கப்பட்டன.

ஒரு வாரம் இடம்பெற்ற ஜே ஆர் இன் வெறியாட்டத்தின் பின் சிங்கள ஊடகங்களுக்கு முன் தோன்றிய ஜே ஆர் உங்கள் ஆயுதங்களை கீழே வையுங்கள் என்றார்.

இவற்றையெல்லாம் அப்போதைய தெற்கு ஊடகங்கள் ஜே ஆரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தமையால் திரிவுபடுத்தி செய்திகளை வெளியிட்டன.

தமிழ் ஊடகம் ஒன்று கொழும்புக்கு வெளியில் சுயாதீனமான செய்திகளை வெளியிட்டு வந்ததால் அதனையும் தீயிட்டு கொழுத்தினர்.

இந்த உண்மைகளை நான் ஆராய்ந்து வைத்திருந்த நிலையில், பொது வெளியில் எழுதுவதற்கு பாதுகாப்பு இல்லாத காரணத்தினால் எனக்கு 40 வருடங்கள் தேவைப்பட்டது .

இந்த நூலில் பல உண்மைத் தகவல்களை ஆதாரத்துடன் எழுதியுள்ள நிலையில் 83 கலவரத்துடன் தொடர்புபட்ட இருவர் இன்றும் உயிருடன் உள்ளார்கள்.

அவர்களின் பெயர்களையும் குறிப்பிட்டு எழுதியுள்ளேன் மறுக்க விரும்பினால் இந்த அரசாங்கத்தில் அவர்கள் மறக்க முடியும்.

ஆகவே இனியாவது இந்த உண்மைகள் சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் தெரிய வேண்டும் என்ற நோக்கத்திற்காக தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் இந்த நூலை இரு மொழிகளிலும் வெளியிட்டு வைக்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அரிசியை அதிகவிலைக்கு விற்று 5 இலட்சத்தை இழந்த கடைக்காரர்
செய்திகள்

அரிசியை அதிகவிலைக்கு விற்று 5 இலட்சத்தை இழந்த கடைக்காரர்

July 26, 2026
பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக சுரேஸ்குமார் ஜெய்ஸ்மன் நியமனம்
செய்திகள்

பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக சுரேஸ்குமார் ஜெய்ஸ்மன் நியமனம்

July 26, 2026
ஏவுகணை கையிருப்பு குறைந்ததால் தாக்குதலை ஒத்திவைக்கிறேன் என அறிவித்த ட்ரம்ப்
செய்திகள்

ஏவுகணை கையிருப்பு குறைந்ததால் தாக்குதலை ஒத்திவைக்கிறேன் என அறிவித்த ட்ரம்ப்

July 26, 2026
கல்லடி மெதடிஸ்த திருச்சபையின்18ஆவது ஆண்டு விழா
செய்திகள்

கல்லடி மெதடிஸ்த திருச்சபையின்18ஆவது ஆண்டு விழா

July 26, 2026
வாழைத்தோட்டம் புனித ஸ்தேவான் மெதடிஸ்த திருச்சபையின் புதிய ஆலய திறப்பு விழா
செய்திகள்

வாழைத்தோட்டம் புனித ஸ்தேவான் மெதடிஸ்த திருச்சபையின் புதிய ஆலய திறப்பு விழா

July 26, 2026
1200cc வரையிலான உயர் திறன் மோட்டார் சைக்கிள்களுக்கு நாட்டில் அனுமதி வழங்க கோரும் நாமல்
செய்திகள்

1200cc வரையிலான உயர் திறன் மோட்டார் சைக்கிள்களுக்கு நாட்டில் அனுமதி வழங்க கோரும் நாமல்

July 26, 2026
Next Post
விடுதலைப் புலிகளால் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதை நினைவூகூற “கறுப்பு ஒக்டோபர்” அனுஷ்டிக்க காத்தான்குடியில் ஏற்பாடு

விடுதலைப் புலிகளால் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதை நினைவூகூற "கறுப்பு ஒக்டோபர்" அனுஷ்டிக்க காத்தான்குடியில் ஏற்பாடு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.