எதிர்வருகின்ற தீபாவளி தினத்துக்கு அண்மையான காலப்பகுதியில் வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தின் அந்தமான் தீவு பகுதி அருகில் உருவாக இருக்கின்ற காற்று சுழற்சியானது, எதிர்வரும் 25, 26, 27, 28ஆம் திகதிகளில் (சில சந்தர்ப்பங்களில் சூறாவழியாக) வலுவடையலாம் என எதிர்பார்க்கப்படுவதாக முன்னாள் வானிலை அதிகாரி சூரியகுமாரன் எமது battinaatham செய்தி சேவைக்கு தகவல் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இது சூறாவளியாக வலுவடையும் சந்தர்ப்பத்தில் இதற்கு தாய்லாந்து நாட்டினால் பரிந்துரை செய்யப்பட்ட மொன்தா (Montha – Pronounce as Mon-Tha) எனும் பெயர் இதற்கு வழங்கப்படும்.

இது வட தமிழ்நாட்டிற்கும் தெற்கு ஆந்திரா பிரதேசத்திற்கு இடையில் ஊடறுத்து செல்லும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை இது நகர்ந்து செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற பாதையானது எமது பிரதேசங்களில் இருந்து சற்று தூரமாக காணப்படுவதனால் இந்த சூறாவளியின் காற்று தாக்கங்கள் எதுவும் இலங்கைக்கு இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.








