மட்டக்களப்பு மாவட்டத்தில் 15 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 17 வயது சிறுவன் ஒருவர் இன்று (16) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் இடம்பெற்றது மாவட்டத்தின் பிரதேசம் ஒன்றில் ஆகும். இன்று அதிகாலை சிறுமி தமது வீட்டிலிருந்து காணாமல் போயிருந்த நிலையில், குடும்பத்தினர் தேடியபோது அவள் வீதியில் இளைஞன் ஒருவருடன் இருந்ததை கண்டுள்ளனர். பின்னர் இருவரும் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, குறித்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் 17 வயது சிறுவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். சிறுமி வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவு அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.








