ரஷ்யாவிடமிருந்து மசகு எண்ணெய் வாங்குவதன் மூலம் உக்ரைன் மீதான போரைக் இந்தியா மறைமுகமாக ஆதரித்து வருவதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இதனால், இந்தியாவுக்கு எதிராக 25 சதவீதம் கூடுதல் வரியையும் அமெரிக்கா விதித்துள்ளது.
இதற்கிடையே, ரஷ்யாவிடம் இருந்து மசகு எண்ணெய் கொள்முதலை படிப்படியாக நிறுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் உறுதி அளித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்திய வெளியுறவு அமைச்சு இந்த தகவலை திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில், வொஷிங்டனில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டிரம்ப், இந்தியாவிற்கு கடுமையான வரிகள் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக ட்ரம்ப் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது,
“இந்திய பிரதமர் மோடியுடன் நான் பேசினேன். ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கப் போவது இல்லை என்று அவர் கூறினார்” என குறிப்பிட்டுள்ளார்.








