Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சிங்கள மொழி பேசுவோரினால் காணி அபகரிப்பு முயற்சிக்கு; மணல்காடு மக்கள் கடும் எதிர்ப்பு

சிங்கள மொழி பேசுவோரினால் காணி அபகரிப்பு முயற்சிக்கு; மணல்காடு மக்கள் கடும் எதிர்ப்பு

9 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு மணல்காடு கிராமத்தில் முந்நூறு ஏக்கர் காணி அபகரிப்பு முயற்சி இன்று மணல்காடு மக்களால் முறியடிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

இன்றைய தினம் காலை வாகனம் ஒன்றில் வந்த சிங்கள மொழி பேசுபவர்கள் தனியார் காணிகள் உட்பட அரச காணிகள் மற்றும் சமூக காடாக பிரகடனப்படுத்தப்பட்ட சவுக்கமரக்காடு உட்பட 300 ஏக்கர் காணியை கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் அனுசரணையுடன் அபகரிப்பதற்கு நில அளவை செய்வதற்கு முற்பட்டுள்ளனர்.

அங்கு காணி அளவீடு செய்வதனை அவதானித்த கிராம மக்கள் உடனடியாக அவ்விடத்திற்கு சென்று காணியை அளவீடு செய்ய விடாது தடுத்துள்ளனர்.

குறித்த சிங்கள மொழி பேசுபவர்கள் மக்களை மிரட்டும் தொனியில் செயற்பட்டுள்ள நிலையிலும் மக்களின் கடும் எதிர்ப்பினால் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

பின்னர் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்திற்கு சென்று அங்கிருந்து மீண்டும் அளவீடு செய்யும் நோக்கில் மணல்காடு நோக்கி சென்றுகொண்டிருந்த நிலையில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு தயாராக நின்றதை அறிந்திருந்தவர்கள் செம்பியன்பற்று பிரதேசத்திலிருந்து திரும்பிச் சென்றுள்ளனர்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த கிராம மக்கள்,

தம்மில் பலருக்கு குடியிருக்கவே காணிகள் இல்லாத நிலை உள்ளதாகவும், இந்நிலையில் தனியர் நிறுவனம் ஒன்றிற்கு வடமராட்சி கிழக்கு பிரதேச செயலரால் காணிகள் வழங்கப்பட்டமையை எதிர்ப்பதாகவும் தெரிவித்ததுடன் ஒருபோதும் இவ்விடயத்தை அனுமதிக்கப்போவதில்லை என்றும் தெரிவித்தனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

வானில் பறக்கும் அதானியின் கனவு; புதிய விமான நிறுவனம் குறித்து ஆலோசனை!
செய்திகள்

வானில் பறக்கும் அதானியின் கனவு; புதிய விமான நிறுவனம் குறித்து ஆலோசனை!

July 23, 2026
சாந்த பண்டாரவின் மகனுக்கு 27ஆம் திகதி வரை விளக்கமறியல்
செய்திகள்

சாந்த பண்டாரவின் மகனுக்கு 27ஆம் திகதி வரை விளக்கமறியல்

July 23, 2026
அமெரிக்கா–சவூதியிடையே அணுசக்தி ஒப்பந்தம்
உலக செய்திகள்

அமெரிக்கா–சவூதியிடையே அணுசக்தி ஒப்பந்தம்

July 23, 2026
நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை; சென்னை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
உலக செய்திகள்

நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை; சென்னை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

July 23, 2026
அக்காலத்தில் போருக்கு ஆட்கள் சேர்த்துக்கொடுத்த இந்த அரசாங்கம் தமிழர்களுக்கு தீர்வு தராது-சுரேஸ்பிரேமச்சந்திரன்
காணொளிகள்

அக்காலத்தில் போருக்கு ஆட்கள் சேர்த்துக்கொடுத்த இந்த அரசாங்கம் தமிழர்களுக்கு தீர்வு தராது-சுரேஸ்பிரேமச்சந்திரன்

July 23, 2026
கடலில் இருந்து ஏவுகணை ஏவி சீனா புதிய வரலாறு; 9 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில்!
செய்திகள்

கடலில் இருந்து ஏவுகணை ஏவி சீனா புதிய வரலாறு; 9 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில்!

July 23, 2026
Next Post
காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழ்நாட்டின் கரையோர பகுதியை நோக்கி நகர்கிறது

காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழ்நாட்டின் கரையோர பகுதியை நோக்கி நகர்கிறது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு