Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
குடும்ப நல சுகாதார உத்தியோகத்தர்களுக்கு 6,000 ரூபாய் கொடுப்பனவு

குடும்ப நல சுகாதார உத்தியோகத்தர்களுக்கு 6,000 ரூபாய் கொடுப்பனவு

10 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

குடும்ப நல சுகாதார உத்தியோகத்தர்கள் சேவையில் 2,613 வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் 2026 மார்ச் மாதமளவில் 1,110 பேருக்கு குடும்பநல உத்தியோகத்தர் பதவிக்கான நியமனங்கள் வழங்கப்படும் என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அத்துடன் குடும்பநல உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள் மற்றும் விசேட பணிகளுக்கு 6,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் (22) நடைபெற்ற அமர்வின்போது வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திராணி கிரியெல்ல எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “சுகாதாரத் துறைக்காக குடும்ப சுகாதார உத்தியோகத்தர்கள் கர்ப்பத்திற்கு முந்தைய பராமரிப்பு, கர்ப்பகால பராமரிப்பு மற்றும் பிரசவத்துக்குப் பிந்தைய பராமரிப்பு ஆகிய துறைகளில் தரமானதும், கருணையுடனும் கூடிய சேவைகளை வழங்கி வருகின்றனர்.

அத்துடன் தாய்சேய் சுகாதார மேம்பாட்டை அடிப்படையாகக் கொண்டு அனைத்து சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களையும் உள்ளடக்கியவாறு சுகாதார கல்வி வழங்குதல் போன்ற சேவைகளையும் வழங்குகிறார்கள்.

இன்றளவில் குடும்ப சுகாதார உத்தியோகத்தர்கள் சேவையில் வெற்றிடங்கள் காணப்படுகின்றன. மத்திய அரசின் கீழுள்ள வைத்தியசாலைகளில் 430, மாகாண சபையின் கீழுள்ள வைத்தியசாலைகள் மற்றும் நிறுவனங்களில் 2,183 என்ற அடிப்படையில் மொத்தமாக 2,613 வெற்றிடங்கள் காணப்படுகின்றன.

குடும்ப சுகாதார உத்தியோகத்தர்கள் சேவையில் நிலவும் வெற்றிடங்களுக்கு தீர்வு காண உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. குடும்ப சுகாதார உத்தியோகத்தர் பயிற்சிக் கல்லூரிகளில் 1,110 குடும்பநல உத்தியோகத்தர்கள் பயிற்சிபெறுவதுடன், இவர்கள் 2026 மார்ச் மாதத்துக்குள் தமது பயிற்சிக் காலத்தை நிறைவு செய்யவுள்ளார்கள். பயிற்சியை நிறைவு செய்தவுடன் இவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்படும்.

அதேபோல் மேலும் 1000 பேர் கொண்ட குழுவொன்றை எதிர்காலத்தில் பயிற்சிக்காக ஆட்சேர்ப்பு செய்வதற்கு முகாமைத்துவ சேவை திணைக்களத்தின் அனுமதி பெறுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

2026 ஆம் ஆண்டுக்குள் கள உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்குவதற்கும், விசேட பணிகளுக்கு 6,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் சீருடை கொடுப்பனவும் அதிகரிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

குருக்கள்மடம் மனிதப்புதைகுழி வழக்கு; விசாரணை ஆகஸ்ட் 24 வரை ஒத்திவைப்பு!
செய்திகள்

குருக்கள்மடம் மனிதப்புதைகுழி வழக்கு; விசாரணை ஆகஸ்ட் 24 வரை ஒத்திவைப்பு!

August 5, 2026
அனுமதியின்றி இயங்கிய 24 இணையவழி சூதாட்டத் தளங்களுக்கு இலங்கையில் தடை
செய்திகள்

அனுமதியின்றி இயங்கிய 24 இணையவழி சூதாட்டத் தளங்களுக்கு இலங்கையில் தடை

August 5, 2026
கடந்த ஐந்து ஆண்டுகளில் முப்படைகளிலிருந்து 34 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விலகல்; நாடாளுமன்றத்தில் தகவல்!
செய்திகள்

கடந்த ஐந்து ஆண்டுகளில் முப்படைகளிலிருந்து 34 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விலகல்; நாடாளுமன்றத்தில் தகவல்!

August 5, 2026
க.பொ.த உயர்தர – புலமைப்பரிசில் பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!
செய்திகள்

க.பொ.த உயர்தர – புலமைப்பரிசில் பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!

August 5, 2026
குழந்தைகளின் பசியை ஒழிப்போம்!; மூதூரில் நடைபெற்ற ENOUGH Campaign விழிப்புணர்வு ஊர்வலம்!
செய்திகள்

குழந்தைகளின் பசியை ஒழிப்போம்!; மூதூரில் நடைபெற்ற ENOUGH Campaign விழிப்புணர்வு ஊர்வலம்!

August 5, 2026
நிலவில் மோதவுள்ள ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் பாகம்; 17 மீட்டர் பள்ளம் உருவாகும் என தகவல்!
செய்திகள்

நிலவில் மோதவுள்ள ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் பாகம்; 17 மீட்டர் பள்ளம் உருவாகும் என தகவல்!

August 5, 2026
Next Post
யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது; இலஞ்சம் கொடுத்து தப்பிக்க முயற்சி

யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது; இலஞ்சம் கொடுத்து தப்பிக்க முயற்சி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு