Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கொலை செய்யப்பட்ட லசந்த விக்கிரமசேகர பதிவு செய்யப்பட்ட குற்றவாளி- அவருக்கு பாதுகாப்பு வழங்க முடியாது;ஆனந்த விஜேபால

கொலை செய்யப்பட்ட லசந்த விக்கிரமசேகர பதிவு செய்யப்பட்ட குற்றவாளி- அவருக்கு பாதுகாப்பு வழங்க முடியாது;ஆனந்த விஜேபால

11 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கொலை செய்யப்பட்ட வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்கிரமசேகர பதிவு செய்யப்பட்ட குற்றவாளி, ஆகவே பதிவு செய்யப்பட்ட குற்றவாளியொருவருக்கு பாதுகாப்பு வழங்கும் இயலுமை பொலிஸ் திணைக்களத்துக்கு கிடையாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சதுர கலபதி ‘ கொலை செய்யப்பட்ட வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்கிரமசேகர பொலிஸ்மா அதிபரிடம் பாதுகாப்பு கோரியுள்ளார்.இருப்பினும் அவருக்கு பாதுகாப்பு வழங்கப்படவில்லை’ என்று குறிப்பிட்டார். இதனை சுட்டிக்காட்டி உரையாற்றுகையில் அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

கொலை செய்யப்பட்ட வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்கிரமசேகர பொலிஸ் ஆவணப்படுத்தலுக்கமைய பதிவு செய்யப்பட்ட குற்றவாளி, சட்டத்தின் பிரகாரம் பாதிக்கப்பட்டோருக்கும், சாட்சியாளர்களுக்கும் பிரத்தியேக பாதுகாப்பு வழங்கப்படும்.

பொலிஸ் ஆவணப்படுத்தலில் பதிவு செய்யப்பட்ட குற்றவாளியாக பெயரிடப்பட்டுள்ள ஒருவருக்கு பாதுகாப்பு வழங்கும் இயலுமை பொலிஸ் திணைக்களத்துக்கு கிடையாது.

இந்நிலையில் ​​2025 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 1947 ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் மற்றும் பாதாள உலக வலையமைப்புகளின் முக்கிய பகுதியாக ஆயுதங்கள் இருப்பதாக, அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பாதாள உலகக் கும்பல்கள் இன்னும் ஆயுதங்களை வைத்திருப்பதால், நாடு முழுவதும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகி வருவதாகவும் அவர் இதன் போது தெரிவித்துள்ளார்.

முன்னர் ஒரு இராணுவ முகாமில் இருந்து 78, T-56 துப்பாக்கிகள் பாதாள உலகக் கும்பல்களுக்கு வழங்கப்பட்டதாகவும், அவற்றில் 36 துப்பாக்கிகள் ஏற்கனவே அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தளப் பதிவுகள்; அர்ச்சுனா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வழக்கு!
செய்திகள்

வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தளப் பதிவுகள்; அர்ச்சுனா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வழக்கு!

September 22, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகள்; 9 பேர் விடுதலை!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகள்; 9 பேர் விடுதலை!

September 22, 2026
சவூதியில் தண்டனை எதிர்கொள்ளும் சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த சீலரத்ன தேரர்!
செய்திகள்

சவூதியில் தண்டனை எதிர்கொள்ளும் சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த சீலரத்ன தேரர்!

September 22, 2026
சட்டவிரோத பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!
செய்திகள்

சட்டவிரோத பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!

September 22, 2026
மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது!
செய்திகள்

மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது!

September 22, 2026
தமிழ் தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மட்டக்களப்பு மாணவி!
செய்திகள்

தமிழ் தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மட்டக்களப்பு மாணவி!

September 22, 2026
Next Post
தேங்காய் திருடியவரை கொலை செய்த நபர்; 24 ஆண்டுகள் கழித்து மரண தண்டனை

தேங்காய் திருடியவரை கொலை செய்த நபர்; 24 ஆண்டுகள் கழித்து மரண தண்டனை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு