Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் மீனவர்களுக்காக வழங்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையத்தை பறிக்கும் முயற்சிக்கு கண்டனம்

மட்டக்களப்பில் மீனவர்களுக்காக வழங்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையத்தை பறிக்கும் முயற்சிக்கு கண்டனம்

8 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மீனவர்களின் வளர்ச்சிக்க்காக கடந்த காலத்தில் மீனவர் சங்கங்களுக்கு வழங்கப்பட்ட மண்ணெண்ணை எரிபொருள் நிரப்பு நிலையங்களை பறித்து மீனவர்களின் வயிற்றில் அடித்து பிரதேச சபைக்கு வழங்குவதற்கு சிலர் நாசகார வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த செயற்பாட்டை வன்மையாக கண்டிப்பதுடன் வடக்கு கிழக்கு மீனவர் தொழிற்சங்கங்கள் இணைந்து பாரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என கிழக்கு மாகாண மீனவர் தொழிற் சங்கத்தின் தலைவர் ரத்தினம் பத்மநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு வெய்ஸ்ஒப் மீடியா கற்கை நிலையத்தில் நேற்று வியாழக்கிழமை (23) இடம்பெற்ற ஊடகமாநாட்டில் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட மீனவர் சங்கத்தின் தலைவரும் கிழக்கு மாகாண மீனவர் தொழிற்சங்கத்தின் தலைவருமான இரத்தினம் பத்மநாதன், பாலமீன்மடு திராய்மடு மீனவர் கூட்டுறவு சங்க செயலாளர் ஜெயந்தீஸ் ரூபசேன கலந்து கொண்டு இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த காலத்தில் மீன்பிடி அமைச்சராக இருந்த ராஜிதசேனாரத்தின மட்டக்களப்பு மாவட்டத்தில் பல மில்லியன் ரூபா செலவில் கல்லாறு, காத்தான்குடி, பாலமீன்மடு, களுவங்கேணி கடற்கரை பகுதியில் மீனவர்களின் வளர்ச்சிக்காக ஒரு மண்ணெண்ணைய் எரிபொருள் நிரப்பு நிலையங்களை அமைத்து அந்த பகுதி மீனவ சங்கங்களிடம் கையளித்தார்.

இவ்வாறு அமைக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பாலமீன்மடு, களுவங்கேணி ஆகிய இரண்டு மட்டும் இயங்கி கொண்டிருக்கின்றதுடன் கல்லாறு, காத்தான்குடி ஆகிய இரண்டும் இயங்காமல் பழுதடைந்து துருப்பிடித்து, பாழடைந்து கிடக்கிறது.

இந்த நிலையில் பாலமீன்மடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அந்த பகுதியில் உள்ள 300 படகுகளுக்கு மேற்பட்ட படகுகள் பயன் பெற்று வருகின்றது. அதேபோல் களுவங்கேணி எரிபொருள் நிரப்பு நிலையத்தினால் அந்த பகுதி படகுகளை சேர்ந்த மீனவர்கள் நன்மையடைந்து வருகின்றனர்.

நான் தலைவராக இருந்தபோது தான் தரப்பட்டது. இதனை நாங்கள் தனிநபர் ஒருவருக்கு குத்தகைக்கு கொடுத்து அதில் வரும் வருவாயில் மீனவர் குடும்பத்தில் ஒருவர் உயிரிழந்தால் மரண செலவுக்கு பணம் வழங்கி வருகின்றோம். அதுமட்டுமல்ல பாடசாலை மற்றும் விளையாட்டு கழகங்களின் வளர்ச்சிக்காக பணம் வழங்கி வருகின்றோம்

பாலமீன்மடு ஒரு பெரிய கிராமம் அங்கு ஒரு மாதத்தில் 3 மரணச் சம்பவங்கள் இடம்பெறுகின்றது. ஒரு மரணசசடங்கிற்கு 10 ஆயிரம் ரூபாவை வழங்க வேண்டியுள்ளது. இவ்வாறான நிலையில் மீனவர் சங்கத்துக்கு வருவாயாக வரும் இந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தை பறித்து மீனவர்களின் வயிற்றில் அடித்து பிரதேச சபைக்கு வழங்குவதற்கு சிலர் நாசகார வேலை செய்துவரும் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம்.

மத்திய அரசில் இருந்து வழங்கப்பட்ட இந்த எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எங்கள் கையில் இருந்து பறிபோகுமாக இருந்தால் நாங்கள் கிழக்கு மாகாணம் மட்டுமல்ல வடக்கு மாகாண மீனவர் தொழிற்சங்கமும் ஒன்றிணைந்து பாரிய எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நளிந்த ஜயதிஸ்ஸவின் வாழைக்குலை மதில் பாய்ந்த கதையில் கோட்டா?
அரசியல்

நளிந்த ஜயதிஸ்ஸவின் வாழைக்குலை மதில் பாய்ந்த கதையில் கோட்டா?

June 16, 2026
செல்வம் அடைக்கலநாதன் ரெலோவின் தலைமையாகயிருக்க தகுதியில்லாதவர்; மூத்த உறுப்பினர் ஏகனாதன் வியஜபவானந்தா
அரசியல்

செல்வம் அடைக்கலநாதன் ரெலோவின் தலைமையாகயிருக்க தகுதியில்லாதவர்; மூத்த உறுப்பினர் ஏகனாதன் வியஜபவானந்தா

June 16, 2026
வடக்கு மற்றும் கிழக்கில் மீட்கப்பட்ட தங்கப் பொருட்கள் தொடர்பான எடையிடல் பணிகள் நிறைவு
செய்திகள்

வடக்கு மற்றும் கிழக்கில் மீட்கப்பட்ட தங்கப் பொருட்கள் தொடர்பான எடையிடல் பணிகள் நிறைவு

June 16, 2026
மட்டு கல்லடியில் ஆலயத்தில் இரு குழுக்களுக்கிடையே மோதல்; தடுக்கச்சென்ற முதியவரின் வீட்டை சேதப்படுத்திய நபர்கள்
செய்திகள்

மட்டு கல்லடியில் ஆலயத்தில் இரு குழுக்களுக்கிடையே மோதல்; தடுக்கச்சென்ற முதியவரின் வீட்டை சேதப்படுத்திய நபர்கள்

June 16, 2026
இந்த ஆண்டு 120,000 பேருக்கு அரச சேவையில் வேலைவாய்ப்பு; அமைச்சர் சந்தன அபேரத்ன
செய்திகள்

இந்த ஆண்டு 120,000 பேருக்கு அரச சேவையில் வேலைவாய்ப்பு; அமைச்சர் சந்தன அபேரத்ன

June 16, 2026
வவுனியா – செட்டிக்குளம் வழித்தடத்தில் ‘சிசு செரிய’ பஸ் சேவை ஆரம்பம்
செய்திகள்

வவுனியா – செட்டிக்குளம் வழித்தடத்தில் ‘சிசு செரிய’ பஸ் சேவை ஆரம்பம்

June 16, 2026
Next Post
சில மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிப்பு

சில மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.