Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கிண்ணியா–குறிஞ்சாக்கேணி இடையிலான தற்காலிக படகுச் சேவை உத்தியோகபூர்வமாக ஆரம்பம்

கிண்ணியா–குறிஞ்சாக்கேணி இடையிலான தற்காலிக படகுச் சேவை உத்தியோகபூர்வமாக ஆரம்பம்

11 months ago
in செய்திகள்

கிண்ணியாவுக்கும் – குறிஞ்சாக்கேணிக்கும் இடையிலான படகுப் பாதை சேவை நேற்று (27) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா இந்த சேவையை ஆரம்பித்து வைத்தார்.

​தற்போது குறிஞ்சாக்கேணிப் பால நிர்மாணப் பணிகள் நடைபெற்று வருவதனால், பொது மக்களின் நன்மை கருதி இந்தப் படகுச் சேவை தற்காலிகமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இரண்டு வருடங்களில் பாலத்தின் முழுமையான கட்டட நிர்மாண வேலைகள் நிறைவடையவுள்ள நிலையில், அதுவரைக்கும் இந்தப் படகுப் பாதையின் சேவை செயற்பட உள்ளது.

​இந்தத் தற்காலிகப் படகுப் பாதைக்கும், அதன் பராமரிப்புச் செலவிற்கும் இரண்டு வருடங்களுக்கு அரசாங்கத்தினால் ரூபா 75 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

​பாதுகாப்பற்ற படகு சேவை காரணமாக 2021 ஆம் ஆண்டு, ஒரு தனியார் படகு ஆற்றில் கவிழ்ந்து, ஐந்து மாணவர்கள் உட்பட, 8 பேர் உயிரிழந்த துயர சம்பவத்தைத் தொடர்ந்து, பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்துக்கு முக்கியத்துவம் அளித்து சொகுசு இயந்திரப் படகு ஒன்று நேற்று (27) சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

​புதிய அரசாங்கம் ஒரு வருட காலமே பூர்த்தி அடைந்த நிலையில், கிண்ணியா – குறிஞ்சாக்கேணி ஆற்றுக்கு புதிய பாலம் அமைப்பதற்காக ரூபா 1200 மில்லியன் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளதுடன், தற்போது பாலத்துக்கான நிர்மாண வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

​இந்த நிகழ்வில் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் ரொசன் அக்மீம, தேசிய மக்கள் சக்தியின் கிண்ணியா பிரதேச அமைப்பாளர் எம்.ஈ.எம். ராபிக் உட்பட கிண்ணியா பிரதேச மற்றும் நகர சபைகளின் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய தவிசாளராக ஹிஸ்புல்லாஹ் தெரிவு
அரசியல்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய தவிசாளராக ஹிஸ்புல்லாஹ் தெரிவு

September 15, 2026
பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்
செய்திகள்

பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்

September 15, 2026
மட்டக்களப்பு பழைய கல்லடி பாலத்தில் இருந்து குதித்த இளைஞர்
செய்திகள்

மட்டக்களப்பு பழைய கல்லடி பாலத்தில் இருந்து குதித்த இளைஞர்

September 15, 2026
அவசர நேரங்களில் பொலிஸாரை உடனடியாக தொடர்புகொள்ள புதிய செயலி அறிமுகம்!
செய்திகள்

அவசர நேரங்களில் பொலிஸாரை உடனடியாக தொடர்புகொள்ள புதிய செயலி அறிமுகம்!

September 15, 2026
மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!
செய்திகள்

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!

September 15, 2026
மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்
காணொளிகள்

மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்

September 15, 2026
Next Post
சர்வதேசத்திடம் பாதுகாப்பு கோர ஐக்கிய மக்கள் சக்தி முடிவு

சர்வதேசத்திடம் பாதுகாப்பு கோர ஐக்கிய மக்கள் சக்தி முடிவு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு