Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சர்வதேசத்திடம் பாதுகாப்பு கோர ஐக்கிய மக்கள் சக்தி முடிவு

சர்வதேசத்திடம் பாதுகாப்பு கோர ஐக்கிய மக்கள் சக்தி முடிவு

11 months ago
in அரசியல், செய்திகள், முக்கிய செய்திகள்

மக்கள் பிரதிநிதிகளின் பாதுகாப்பை அரசாங்கம் உறுதி செய்யாவிட்டால், எதிர்வரும் நாட்களில் இது தொடர்பில் சர்வதேச சமூகத்தை நாட வேண்டியிருக்கும் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

அதன்படி, மக்கள் பிரதிநிதிகளின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்காவிடின், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் இவ்விடயத்தை தெரிவிக்க வேண்டியிருக்கும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்விடயத்தை தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்து ஒரு வருடத்திலேயே நூற்றுக்கும் அதிகமான துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

மக்கள் பிரதிநிதிகள், தனது கடமையை செய்யும் நேரத்தில் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். மக்கள் பிரதிநிதிகளின் பாதுகாப்பே இங்கு கேள்விக்குறியாக இருக்கும் போது, நாட்டில் பொது மக்களுக்கான பாதுகாப்பு தொடர்பில் சந்தேகங்கள் எழுகின்றன.

வெலிகம தவிசாளர் கொலை செய்யப்பட்டு சிறுதி நேரத்திலேயே அவருக்கு பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புகள் இருந்ததாக அரசாங்கம் அறிவித்தது. இவ்வாறான காரணங்களை காட்டி, அரசாங்கம் மக்கள் பிரதிநிதிகளுக்காக பாதுகாப்பை மறுத்து வருகிறது.

ஒரு கட்சியாக போதை ஒழிப்பு மற்றும் பாதாள உலகக் குழுக்களை ஒழிக்கும் அரசாங்கத்தின் திட்டங்களுக்கு நாம் ஆதரவு தெரிவித்தாலும் கூட இவ்வாறாக பொறுப்பற்ற விடயங்களையும் நாம் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

ஆகவே, மக்கள் பிரதிநிதிகளுக்கான பாதுகாப்பை அரசாங்கம் உறுதி செய்யாவிடின், இது தொடர்பில் சர்வதேசத்துக்கு அறிவிக்கவும் ஐக்கிய மக்கள் சக்தி தயாராக உள்ளது.” என தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ரூ.900 இலட்சத்துக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!
செய்திகள்

ரூ.900 இலட்சத்துக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!

September 18, 2026
தோட்டப்புற பாடசாலைகளை மேம்படுத்த புதிய திட்டம்!
செய்திகள்

தோட்டப்புற பாடசாலைகளை மேம்படுத்த புதிய திட்டம்!

September 18, 2026
நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிக்கும் வாய்ப்பு!
செய்திகள்

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிக்கும் வாய்ப்பு!

September 18, 2026
இலங்கை அணியின் வீரர் தெரிவு- உடற்தகுதி குறித்து சங்கக்கார கடும் விமர்சனம்
செய்திகள்

இலங்கை அணியின் வீரர் தெரிவு- உடற்தகுதி குறித்து சங்கக்கார கடும் விமர்சனம்

September 18, 2026
சம்பூரில் அனுமதியற்ற சுருக்கு வலை பறிமுதல்
செய்திகள்

சம்பூரில் அனுமதியற்ற சுருக்கு வலை பறிமுதல்

September 18, 2026
வட்டவளையில் குளவி கொட்டுக்கு இலக்கான ஐவர் வைத்தியசாலையில்!
செய்திகள்

வட்டவளையில் குளவி கொட்டுக்கு இலக்கான ஐவர் வைத்தியசாலையில்!

September 18, 2026
Next Post
அநுராதபுரத்தில் மாமனாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மருமகன் உயிரிழப்பு

அநுராதபுரத்தில் மாமனாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மருமகன் உயிரிழப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.