சம்மாந்துறையிலுள்ள தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதியான ஆண்கள் விடுதி மற்றும் தங்குமிடப்பகுதியில் இன்று காலை (29) தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
மெத்தைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அறையிலேயே குறித்த விபத்து நிகழ்ந்துள்ளதுடன், உயிர்சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை.
தீயணைப்பு படையினரால் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், குறித்த தீப்பற்றல் எவ்வாறு நிகழ்ந்தது என்று குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.








