ஏற்கனவே திறக்கப்பட்ட ஏறாவூர் பற்று மீராக்கேணி சந்தையை மீண்டும் திறந்து முஸ்லீம் மக்களின் கதாநாயகனாக மாறுவதற்கு ஏறாவூர் பற்று பிரதேச சபை தவிசாளர் முயற்சி செய்வதாக குற்றச் சாட்டுக்கள் எழுந்துள்ளன.
ஏறாவூர் பற்று பிரதேச சபை பிரிவில் மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகளை செய்யாது இதுவரை தவிசாளர் இழுத்தடிப்பு செய்து வருவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுவருவதுடன், ஏறாவூர் பற்று முஸ்லீம் பிரதேசத்தில் உள்ள மீராக்கேணி சந்தை ஏற்கனவே NPP பாராளுமன்ற உறுப்பினரால் திறக்கப்பட்டிருந்த நிலையில் அதனை ஏறாவூர் பற்று தவிசாளர் முரளி மீண்டும் நேற்று முன்தினம் (29) சென்று திறந்து வைத்தமை முஸ்லீம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த மக்கள், மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய ஏறாவூர் பற்று பிரதேச சபை தவிசாளர் அரசியல் நோக்கங்களுக்காக ஏற்கனவே திறந்த சந்தையை மாலை மரியாதைகளுடன் சென்று மீண்டும் திறந்துள்ளார் என விசனம் தெரிவிக்கின்றனர்.









