செங்கலடி வாசன் பாலர் பாடசாலையின் வருடாந்த ஆரம்ப மற்றும் பட்டமளிப்பு விழா, பாடசாலையின் ஸ்தாபகத் தலைவர் திரு. ரீ. சுபாஸ்சந்திரநாதன் அவர்களின் தலைமையில் செங்கலடி மத்திய கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.
இவ்விழாவின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு முன்பள்ளி பாடசாலைகளின் பணிப்பாளர் ரீ. பத்மநாதன் கலந்துகொண்டார். மேலும் கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் திருமதி நிறஞ்சனா றெணி, வாசிசேனை பிரதேச செயலக உத்தியோகத்தர் எம். சர்யூன், செங்கலடி கிராம சேவகர் கே. பிரதீப்குமார், முன்னாள் பாலர் பாடசாலை அதிபர் ஆர். றேணுகா, செங்கலடி தேசிய சேமிப்பு வங்கியின் பிரதி முகாமையாளர் யூ. நிறஞ்சன் உள்ளிட்ட பலரும் விழாவில் பங்கேற்றனர்.
மாணவர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்தியதுடன், அவர்களின் ஆற்றலை வெளிப்படுத்தும் பல்வேறு நிகழ்ச்சிகள் சிறப்பாக இடம்பெற்றன. ஆசிரியர்கள் மாணவர்களை திறமையாக உருவாக்கிய விதத்திற்கும், மாணவர்களின் சிறப்பான ஆற்றலுக்கும் அதிதிகள் பாராட்டுத் தெரிவித்தனர்.
இவ்விழாவின் இறுதியில் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு பட்டமளிப்பு நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றது. பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்ட இவ்விழா மகிழ்ச்சி மற்றும் பெருமையின் சூழலில் நிறைவடைந்தது.
































