Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இன்று சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ள 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பான மேலதிக விபரம்

இன்று சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ள 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பான மேலதிக விபரம்

9 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு அல்லது வரவு செலவுத் திட்ட உரை இன்று (07) பிற்பகல் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (07) பிற்பகல் 01.30 மணிக்கு பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட உரையைச் சமர்ப்பிக்க உள்ளார்.

அதற்கிணங்க, ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தொடர்பான வரவு செலவுத் திட்ட விவாதம் நாளை (08) முதல் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி வரை நடைபெற உள்ளதாகப் பாராளுமன்றத் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்புக்கான வாக்கெடுப்பு நவம்பர் 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணிக்கு நடைபெற உள்ளது.

வரவு செலவுத் திட்ட மூன்றாம் வாசிப்பு அல்லது குழு நிலை விவாதம் நவம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் 17 நாட்கள் இடம்பெற்ற பின்னர், வரவு செலவுத் திட்ட மூன்றாம் வாசிப்புக்கான வாக்கெடுப்பு டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு நடத்தப்பட உள்ளது.

வரவு செலவுத் திட்டக் காலப்பகுதியில் அரசாங்க விடுமுறை நாட்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் தவிர்த்து மற்றைய ஒவ்வொரு நாளும் வரவு செலவுத் திட்ட விவாதம் நடைபெற உள்ளதாகப் பாராளுமன்றத் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்தது.

2026 ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் மொத்தச் செலவு ரூபா 4,434 பில்லியன் ஆகும்.

எதிர்வரும் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் அதிகபட்ச நிதி ஒதுக்கப்பட்டுள்ளது நிதி அமைச்சுக்கு ஆகும், அதன் பெறுமானம் ரூபா 634 பில்லியன் ஆகும்.

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்காக ரூபா 618 பில்லியனும், அரச நிர்வாக அமைச்சுக்காக ரூபா 596 பில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளது.

சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சுக்காக ஒதுக்கப்பட்ட நிதி ரூபா 554 பில்லியனாகவும், பாதுகாப்பு அமைச்சுக்காக ஒதுக்கப்பட்ட நிதி ரூபா 455 பில்லியனாகவும் உள்ளது.

கல்வி அமைச்சுக்காக ரூபா 301 பில்லியனும், ஜனாதிபதியின் செலவுத் தலைப்பிற்காக ரூபா 11 பில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இது 2025 ஆம் ஆண்டில் ஜனாதிபதியின் செலவுத் தலைப்பிற்காக ஒதுக்கப்பட்ட ரூபா 2.7 பில்லியனை விட சுமார் 8 பில்லியன் ரூபா அதிகமாகும்.

பிரதானமாக அபிவிருத்தித் திட்டங்களுக்காக 2026 ஆம் ஆண்டில் ரூபா 8.29 பில்லியன் நிதி ஒதுக்கப்பட்டமையே இவ்வாறு செலவுத் தலைப்பு அதிகரிப்பதற்குக் காரணம் என்று குறிப்பிடப்படுகிறது.

மேலும், 2026 ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் ஓய்வூதியங்களுக்காக ரூபா 488 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், 2026 ஆம் ஆண்டுக்கான செலவுகளை ஈடுசெய்வதற்காக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பெறக்கூடிய அதிகபட்ச கடன் எல்லையாக ரூபா 3,800 பில்லியன் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், அதனை மீறக்கூடாது என்றும் ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சை விண்ணப்பத் தகவல் திருத்தம்; ஓகஸ்ட் 3 வரை அவகாசம்
செய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சை விண்ணப்பத் தகவல் திருத்தம்; ஓகஸ்ட் 3 வரை அவகாசம்

July 23, 2026
மத்திய கிழக்கு பதற்றம் எதிரொலி; கச்சா எண்ணெய் விலை 100 டொலரைக் கடந்தது!
செய்திகள்

மத்திய கிழக்கு பதற்றம் எதிரொலி; கச்சா எண்ணெய் விலை 100 டொலரைக் கடந்தது!

July 23, 2026
உயிர்த்த ஞாயிறு வழக்கு; கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு ஓகஸ்ட் 3 வரை ஒத்திவைப்பு!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு வழக்கு; கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு ஓகஸ்ட் 3 வரை ஒத்திவைப்பு!

July 23, 2026
வானில் பறக்கும் அதானியின் கனவு; புதிய விமான நிறுவனம் குறித்து ஆலோசனை!
செய்திகள்

வானில் பறக்கும் அதானியின் கனவு; புதிய விமான நிறுவனம் குறித்து ஆலோசனை!

July 23, 2026
சாந்த பண்டாரவின் மகனுக்கு 27ஆம் திகதி வரை விளக்கமறியல்
செய்திகள்

சாந்த பண்டாரவின் மகனுக்கு 27ஆம் திகதி வரை விளக்கமறியல்

July 23, 2026
அமெரிக்கா–சவூதியிடையே அணுசக்தி ஒப்பந்தம்
உலக செய்திகள்

அமெரிக்கா–சவூதியிடையே அணுசக்தி ஒப்பந்தம்

July 23, 2026
Next Post
கனடாவில் இலங்கை குடும்பமே படுகொலை; குற்றத்தை ஒப்புக்கொண்ட 20 வயது இளைஞன்

கனடாவில் இலங்கை குடும்பமே படுகொலை; குற்றத்தை ஒப்புக்கொண்ட 20 வயது இளைஞன்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.