புதுடில்லி செங்கோட்டை அருகே நேற்று (10) மாலை ஹுண்டாய் ஐ-20 கார் வெடித்துச் சிதறியதில் 13 பேர் உயிரிழந்தனர் 24 பேர் காயமடைந்தனர். கார் உரிமையாளர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
வெடிப்பின் தன்மை குறித்து தேசிய புலனாய்வு முகமை (NIA) மற்றும் தேசிய பாதுகாப்புப் படையினர் விசாரணை நடத்துகின்றனர். இது பயங்கரவாதத் தாக்குதலா என இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
வெடிப்பால் அருகிலிருந்த ஆறு கார்கள், இரண்டு இரிக்ஷாக்கள், ஒரு ஆட்டோ தீயில் எரிந்தன. பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார் உள்துறை அமைச்சர் அமித் ஷா சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
தில்லி முழுவதும் விமான நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.








