Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மன்னாரில் தீப்பந்த எழுச்சி போராட்டம்; 100வது நாளை கடந்த காற்றாலைக்கான எதிர்ப்பு

மன்னாரில் தீப்பந்த எழுச்சி போராட்டம்; 100வது நாளை கடந்த காற்றாலைக்கான எதிர்ப்பு

10 months ago
in காணொளிகள், செய்திகள், முக்கிய செய்திகள்

மன்னாரில் காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் நேற்றைய தினம் திங்கட்கிழமை(10) நூறாவது (100) நாளை எட்டியுள்ள நிலையில் நேற்று இரவு 7.30 மணியளவில் தீப்பந்த எழுச்சி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டக் குழுவின் ஏற்பாட்டில்,அருட்தந்தை மாக்கஸ் அடிகளார் தலைமையில் குறித்த தீப்பந்த எழுச்சி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டத்தில் ஆண்கள்,பெண்கள்,போராட்டக் குழு உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமைதியான முறையில் கையில் தீப்பந்தங்களை ஏந்தியவாறு காற்றாலைக்கு தமது எதிர்ப்பை தெரிவித்தனர்.

மக்களையும், மக்களின் வாழ் விடங்களையும், நாட்டின் வளத்தையும், பாதுகாத்து வருங்கால சந்ததியினரிடம் கையளிக்கும் மாபெரும் வாழ்வுரிமைச் சாத்வீகப் போராட்டம் 100வது நாளை ஈட்டிய நிலையில், இன்னும் தொடரும் என தெரிவித்துள்ளனர்.

இப்போராட்டத்தின் 100வது நாளை நினைவுகூரும் இந்நாளில், மூன்று காத்திரமான கோரிக்கைகளை மக்கள் சார்பில் முன் வைத்துள்ளனர்.

மன்னார் தீவில் முன்னெடுக்கப்படும் 14 காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டத்தை உடன் நிறுத்தி வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்,மன்னார் தீவில் எந்த ஒரு இடத்திலும் கனிய மணல் அகழ்வுக்கு எந்த அனுமதியும் வழங்கக்கூடாது.

அமைக்கப்பட்ட (தம்ப்பவனி நறுவிலிக்குளம்) 2 காற்றாலை உயர் மின் உற்பத்தி திட்டங்களினால் ஏற்பட்ட பாதிப்புக்களை உடன் நிவர்த்தி செய்தல் ஆகிய காத்திரமான 3 கோரிக்கைகளையும் அரசு தம் மக்களின் கோரிக்கை யாக ஏற்றுக்கொண்டு, மக்களின் விருப்பத்தை நிறை வேற்றுவதாக எழுத்து மூலம் அறிவிக்கும் பட்சத்தில், எங்களுடைய மக்களின் இந்த புனிதமான அறவழிப் போராட்டம் நிறைவுக்கு வரும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

மேலும் நேற்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்ட தீப்பந்த எழுச்சி போராட்டம் நாளை முதல் கிராமங்கள் தோறும் இடம்பெறும் என போராட்டக்குழு சார்பாக அருட்தந்தை மாக்கஸ் அடிகளார் தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!
செய்திகள்

முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!

September 12, 2026
Next Post
இலங்கையில் அதிகரிக்கும் “கெரடோகோனஸ்” கண் நோய்; பாடசாலை மாணவர்கள் உட்பட இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை

இலங்கையில் அதிகரிக்கும் “கெரடோகோனஸ்” கண் நோய்; பாடசாலை மாணவர்கள் உட்பட இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு