Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஜனாதிபதி ஐ.எம்.எப் முன் பூனை, எதிர்க்கட்சியிடம் ஹிட்லர்; நாமல் ராஜபக்ச குற்றச்சாட்டு

ஜனாதிபதி ஐ.எம்.எப் முன் பூனை, எதிர்க்கட்சியிடம் ஹிட்லர்; நாமல் ராஜபக்ச குற்றச்சாட்டு

7 months ago
in செய்திகள்

ஜனாதிபதி எதிர்க்கட்சி உறுப்பினர்களிடம் ஹிட்லர் போன்று கத்துகின்றார். சர்வதேச நாணய நிதியத்திடம் மட்டும் பூனை போல் இருக்கின்றார். ஹிட்லர் அவருடைய சர்வாதிகாரத்தாலே அழிந்தார் என்பதை ஜனாதிபதி நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

பாராளுமன்றில் நேற்று (11) இடம்பெற்ற 2026ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டம் மீதான 3 ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

ஜனாதிபதி அநுரகுமார வரவு செலவு திட்ட உரையின்போது என்னை இங்கு ஹிட்லர் என்றும் சர்வாதிகாரி என்றும் கூறினார்கள். அமெரிக்காவும், ரஷ்யாவும் இணைந்து ஹிட்லரை தோற்கடித்ததுபோல, எதிரணிகள் ஒன்றிணைந்து தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை தோற்படிப்பார்களாம். ஆனால் யார் இங்கு ரஷ்யா?அமெரிக்கா? என்று கேட்டார்.

யார் இங்கு ரஷ்யாவாக இருந்தால் என்ன அமெரிக்காவாக இருந்தால் என்ன அது முக்கியமில்லை. ஹிட்லர் அவருடைய சர்வாதிகாரத்தாலே அழிந்தார் என்பது தான் முக்கியம்.

ஜனாதிபதி எங்களிடம் ஹிட்லர் போன்று கத்துவதை போன்று ஐ.எம்.எப் யிடம் கத்துங்கள் பார்க்கலாம். அங்கு மட்டும் பூனை போல் இருக்கிறீர்கள்.

சர்வதேச நாணய நிதியத்தை விரட்டுவதாக கூறிக்கொண்டே ஜனாதிபதி ஆட்சிக்கு வந்தார். ஆனால் எங்களுக்கு போடும் சத்தத்தை சர்வதேச நாணய நிதியத்திற்கு போடுவதில்லையே.

மக்களுக்கு அநீதியாக வரி அறவிட வேண்டாம். பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என்றும் சர்வதேச நாணய நிதியத்திடம் கூறுங்களேன். அதைக் கூறமாட்டார் என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மாணவி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு வீடியோ இணையத்தில் வெளியீடு; அதிபர், பிரதி அதிபர் மற்றும் மாணவர் ஒருவர் கைது!
செய்திகள்

மாணவி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு வீடியோ இணையத்தில் வெளியீடு; அதிபர், பிரதி அதிபர் மற்றும் மாணவர் ஒருவர் கைது!

June 20, 2026
சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளுக்கு சிறப்பு நீதிமன்றம் அமைத்து கடும் தண்டனை வழங்க வேண்டும்; அந்தனிசில் ராஜ்குமார்!
காணொளிகள்

சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளுக்கு சிறப்பு நீதிமன்றம் அமைத்து கடும் தண்டனை வழங்க வேண்டும்; அந்தனிசில் ராஜ்குமார்!

June 20, 2026
நாட்டில் தீவிரமடைந்து வரும் டெங்கு பரவல்; சுகாதார அமைப்பு எச்சரிக்கை!
செய்திகள்

நாட்டில் தீவிரமடைந்து வரும் டெங்கு பரவல்; சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

June 20, 2026
பல்பொருள் அங்காடியில் பொருட்கள் திருடியதாக பெண் சட்டத்தரணி கைது!
செய்திகள்

பல்பொருள் அங்காடியில் பொருட்கள் திருடியதாக பெண் சட்டத்தரணி கைது!

June 20, 2026
உயர்தரக் கல்விக்கு 2.25 இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தகுதி!
செய்திகள்

உயர்தரக் கல்விக்கு 2.25 இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தகுதி!

June 20, 2026
பெண் வைத்தியருக்கு எதிரான அவதூறு பிரசாரம்; அர்ச்சுனாவுக்கு நீதிமன்றம் தடையுத்தரவு!
செய்திகள்

பெண் வைத்தியருக்கு எதிரான அவதூறு பிரசாரம்; அர்ச்சுனாவுக்கு நீதிமன்றம் தடையுத்தரவு!

June 20, 2026
Next Post
அரசுக்கு 4,750,828.72 நட்டம்; பிரசன்ன ரணதுங்கவிற்கு பிணை

அரசுக்கு 4,750,828.72 நட்டம்; பிரசன்ன ரணதுங்கவிற்கு பிணை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு