Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பொலிஸ் அதிகாரி ஒருவர் மீது ரிஷாட் பதியுதீன் குற்றச்சாட்டு

பொலிஸ் அதிகாரி ஒருவர் மீது ரிஷாட் பதியுதீன் குற்றச்சாட்டு

8 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

போதைப்பொருள் வர்த்தகத்தை ஊக்குவிப்பதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

வரவு செலவு திட்டம் தொடர்பில் நாடாளுமன்றில் இன்றைய தினம் (12) நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நுரைச்சோலை பிரதேசத்திற்கு பொறுப்பான பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி போதைப்பொருள் வர்த்தகத்தை ஊக்குவிப்பதாக அவர் நேரடியாக குற்றம் சுமத்தியுள்ளார்.

குறித்த பொலிஸ் நிலைய பொறுப்பு அதிகாரி போதைப்பொருள் வர்த்தகர்களுடன் இணைந்து செயல்படுவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

அண்மையில் வெளியான குரல் பதிவு ஒன்றின் மூலம் இந்த விடயம் அம்பலமாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விடுதி ஒன்றின் உரிமையாளருக்கு அழைப்பை ஏற்படுத்தி ஆறு பேர் குறித்த விடுதிக்கு வருவதாகவும் அவர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுக்குமாறும் கோரும் குரல் பதிவு வெளியாகி உள்ளது என முன்னாள் அமைச்சர் ரிசார்ட் பதியூதீன் தெரிவித்துள்ளார்.

பண கொடுக்கல் வாங்கல் தொடர்பிலும் இந்த உரையாடலில் இடம் பெற்றுள்ளது எனவும் அடுத்த மாதத்திற்கான கொடுப்பனவு இப்போது செலுத்தத் தேவையில்லை ஐம்பதாயிரம் ரூபா செலுத்துங்கள் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி விடுதி உரிமையாளரிடம் பேசிக் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நபர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். பொலிஸஸார் மற்றும் இராணுவத்தினர் குற்ற செயல்களில் ஈடுபடுவது குறித்து அம்பலப்படுத்துமாறு அரசாங்கம் கூறியதாகவும் அதன் அடிப்படையில் தான் இந்த தகவல்களை வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நுரைச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காது அவர்களுக்கு உடந்தையாக செயல்படுகின்றார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இந்த தகவல்களை வழங்கியமைக்கு நன்றி எனவும் இது தொடர்பில் விசாரணை நடத்தப்படும் எனவும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பஸ் கட்டணத் திருத்தத்தால் மக்களுக்கு அசௌகரியம்
செய்திகள்

பஸ் கட்டணத் திருத்தத்தால் மக்களுக்கு அசௌகரியம்

July 5, 2026
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விநாயகமூர்த்தி முரளிதரனிடம் சிஐடி வாக்குமூலம் பதிவு?
செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விநாயகமூர்த்தி முரளிதரனிடம் சிஐடி வாக்குமூலம் பதிவு?

July 5, 2026
சாய்ந்தமருதில் திரைப்பட பாணியில் மூவரை கைதுசெய்த பொலிஸ்
செய்திகள்

சாய்ந்தமருதில் திரைப்பட பாணியில் மூவரை கைதுசெய்த பொலிஸ்

July 5, 2026
டெங்கு நுளம்பு பரவும் இடங்களை அறிவிக்க தொலைபேசி இலக்கம் அறிமுகம்
செய்திகள்

டெங்கு நுளம்பு பரவும் இடங்களை அறிவிக்க தொலைபேசி இலக்கம் அறிமுகம்

July 5, 2026
கொங்கோவில் எபோலா வைரஸ் பாதிப்பால் 473 பேர் உயிரிழப்பு
உலக செய்திகள்

கொங்கோவில் எபோலா வைரஸ் பாதிப்பால் 473 பேர் உயிரிழப்பு

July 5, 2026
பொருளாதார மீட்சிக்காக 4 இலட்சம் அஸ்வெசும பயனாளிகளை நீக்க அரசு தீர்மானம்
செய்திகள்

பொருளாதார மீட்சிக்காக 4 இலட்சம் அஸ்வெசும பயனாளிகளை நீக்க அரசு தீர்மானம்

July 5, 2026
Next Post
விவசாயிகளுக்கான விதை நெல் காப்புறுதித் திட்டம் அறிமுகம்

விவசாயிகளுக்கான விதை நெல் காப்புறுதித் திட்டம் அறிமுகம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.