Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
“பாடபுத்தகங்கள் வழங்குவதை நிறுத்தக்கூடாது”; அரசை எச்சரித்த கிழக்கு பல்கலை மாணவர் ஒன்றியம்

“பாடபுத்தகங்கள் வழங்குவதை நிறுத்தக்கூடாது”; அரசை எச்சரித்த கிழக்கு பல்கலை மாணவர் ஒன்றியம்

10 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

அராசாங்கம் அத்தியாவசிய கல்விக்காக நூற்றுக்கு ஆறு சதவீதம் ஒதுக்குவதாக தெரிவித்து அதனை இந்த வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கீடு செய்யாமல் மக்களை ஏமாற்றுகின்றது. அதேவேளை கல்வி சீர்திருத்தம் என்ற போர்வையில் கிராமப்புற பாடசாலைகளை மூடுவது பாடப்புத்தகங்களை இல்லாமல் செய்வதை அரசாங்கம் நிறுத்தவேண்டும் அல்லது பல்கலைக்கழக மாணவர் போராட்டம் வெடிக்கும் என கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு பஸ் தரிப்பு நிலையத்தில் ‘பாடசாலைகள் மூடப்படுகிறது பாட புத்தகங்கள் இல்லை, மாணவர்கள் கல்வியை விட்டு வெளியேற்றம், சீர்திருத்தத்தை தோற்கடிப்போம்’ எனும் தொனிப் பொருளில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை (14)மட்டக்களப்பு பஸ் தரிப்பு நிலையத்தில கையொழுத்து வேட்டை ஒன்றை ஆரம்பித்தனர் இதன் போது அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தனர்.

“அராசாங்கம் அத்தியாவசிய கல்விக்காக நூற்றுக்கு ஆறு சதவீதம் ஒதுக்குவதாக தெரிவித்து அதனை இன்று வரை வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கீடு செய்யாமல் மக்களை ஏன் ஏமாற்றுகிறது இன்றைய இளைய சமூதாயத்தினர் நாளைய தலைவர்கள் அவர்களின் கல்வி தேவைக்காக ஒதுக்கப்படும் நிதியை இடை நிறுத்தினால் மாணவர்களின் கல்வி எந்தளவுக்கு செல்லும் மக்களே சிந்தியுங்கள்.

இவ்வாறான அரசாங்கத்தின் செயற்பாட்டை கண்டித்து பல்கலைக்கழக மாணவர்கள் இந்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளோம். ஏன் என்றால் கிராம புறங்களில் உள்ள பாடசாலைகளில் 50 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பாடசாலைகளை மூடுவதுக்கு தீர்மானித்துள்ளது இவ்வாறு அரசாங்கம் கிராமபுற பாடவசாலைகளை மூடினால் அந்த மாணவர்களின் நிலை, அவர்களின் பெற்றேர்களின் நிலை அவர்களின் வீட்டின் நிதி நிலமை அவர்களின் எதிர்கால வாழ்க்கை என்னாவாகும சிந்தியுங்கள்.

பல்கலைக்கழக மாணவர்களுக்கு மகாபொல புலமைபரிசு தொகையை 10 ஆயிரமாக உயர்தியதால் பல்கலைக்கழக மாணவர்கள் அரசாங்கம் சொல்லும் எதற்கும் எதிர்ப்பு தெரிவிக்காது தலையாட்டிச் செல்வார்கள் என நினைக்க கூடாது.

அரசாங்கத்துக்கு மீண்டும் வலியுறுத்துவது இந்த நாட்டிலுள்ள மாணவர்களை ஏமாற்றாது போலியான நம்பிக்கையை வழங்காது கொடுத்து வாக்குறுதிகளை சரியான முறையில் சரியாக நிறைவேற்ற வேண்டும்.

எனவே மாணவர்களை மீண்டும் மீண்டும் முட்டாள்கள் ஆக்க வேண்டாம் அத்தோடு அரசாங்கம் இந்த பாடசாலைகளை மூடுவது மற்றும் பாட புத்தகங்களை நிறுத்துவது போன்ற நடவடிக்கைகளை உடன் நிறுத்தவேண்டும்” என தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewspoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!
செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!

September 12, 2026
பிரதமர் தலைமையில் மட்டக்களப்பில் 55 மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்கள் கௌரவிப்பு!
மட்டு செய்திகள்

பிரதமர் தலைமையில் மட்டக்களப்பில் 55 மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்கள் கௌரவிப்பு!

September 12, 2026
ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
Next Post
காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தாயை தீ வைத்து கொலை செய்த சிறுமி

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தாயை தீ வைத்து கொலை செய்த சிறுமி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.