அகில இலங்கை முன்பள்ளி ஆசிரியர் சங்கத்தின் கிழக்கு மாகாண கிளை மற்றும் கிழக்கு மாகாண ஆசிரியர் சங்கம் இணைந்து நடாத்திய ஆசிரியர் தின விழாவும், ஆசிரியர்கள் சேவை நலன் பாராட்டு விழாவும் நேற்று (20) மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பிரதேச சபை கலாச்சார மண்டபத்தில் புலம்பெயர்ந்த மக்களின் அனுசரணையில் நடைபெற்றது.
விழாவின் பிரதம விருந்தினராக போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் செயலாளர் கௌரவ திரு. சோ. ரங்கநாதன் கலந்து சிறப்பித்தார்.
கௌரவ விருந்தினர்களாக திருமதி அருந்ததி சிவரெத்தினம் அம்மணி முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர், போரதீவுப்பற்று பிரதேச செயலகம் – வெல்லாவெளி, திருமதி மேரி நிர்மலா கெளரவ கலாநிதி மற்றும் அகில இலங்கை முன்பள்ளி ஆசிரியர் சங்கத் தலைவி ஆகியோர் கலந்து விழாவை மேலும் சிறப்பித்தனர்.
















