Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தவிசாளரின் அடாவடித்தனங்கள் தொடர்ந்தால் மக்களை ஒன்றுதிரட்டி வீதிக்கு இறங்குவோம்; யோ. சந்திரகுமார்

தவிசாளரின் அடாவடித்தனங்கள் தொடர்ந்தால் மக்களை ஒன்றுதிரட்டி வீதிக்கு இறங்குவோம்; யோ. சந்திரகுமார்

10 months ago
in செய்திகள்

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளரின் தன்னிச்சையான அடாவடித்தனங்கள் தொடர்ந்தால் மக்களை ஒன்றுதிரட்டி வீதிக்கு இறங்கப்போவதாக குறித்த பிரதேச சபையின் உறுப்பினர் யோ. சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (20) சபை அமர்வின்போது தவிசாளரின் நடவடிக்கைகள் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையில்,

தவிசாளரின் தன்னிச்சையான அடாவடித்தனங்கள் தொடர்ந்தால் மக்களுடன் வீதிக்கு இறங்குவோம். இன்றையதினம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் சபை அமர்வு இடம்பெற்றது. இதன்போது தவிசாளரினால் தனியார் கல்வி நிலையங்களை கட்டுப்படுத்துவது தொடர்பான பிரேரணை கொண்டுவரப்பட்டது.

மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை நாம் கட்டுப்படுத்தும்போது எமது பிரதேச மாணவர்களின் கல்வி அடைவு மட்டம் பாதிக்கப்படும் என்பதனை தெளிவுபடுத்தியிருந்தோம். எமது கருத்துக்களை உள்வாங்காது பிரேரணையினை நிறைவேற்ற முற்பட்டபோது உறுப்பினர்களால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதனால் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. வாக்கெடுப்பின்போது நாம் எதிராக வாக்களிக்கும் போது தவிசாளர் எம்மைப்பற்றி தவறான பொய்யான கருத்துக்களை கூறி வீடியோ பதிவு செய்யப்பட்டது.

எம்மைப்பற்றி தவறாக பொய்யான கருத்து தெரிவித்து அதனை வீடியோ பதிவு செய்து எமக்கு எதிரான செய்திகளை வெளியிட வேண்டாம் என நான் சுட்டிக்காட்டியதோடு ஏனைய உறுப்பினர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதன்போது உறுப்பினர் துவேனிகா ருக்மாங்கதன் தனது கருத்தினை தெரிவிக்க முற்பட்டபோது என்ன வெளியில் அனுப்பவா என கடும் தொணியில் மிரட்டல் விட்டதோடு பேசவிடாமல் தடுத்திருந்தார்.

உறுப்பினர் கி.வதனகுமார் தனது கருத்துக்களை தெரிவித்தபோது கருத்துக்களை தெரிவிக்க இடம் கொடுக்காமல் தடுத்ததோடு தனது அதிகாரத்தை பாவித்து ஒரு மாதத்திற்கு சபையிலிருந்து வெளியேற்றுவதாக அறிவித்ததுடன் வெளியேற்றுவதற்கான பிரேரணையினையும் கொண்டு வந்தார். 20 உறுப்பினர்களைக்கொண்ட சபையில் இப் பிரேரணைக்கு எதிராக 10 வாக்குகளும் ஆதரவாக 10 வாக்குகளும் அளிக்கப்பட்டன. அதனால் தனது மேலதிக வாக்கினையும் தவிசாளர் பயன்படுத்தி தனது இரண்டு வாக்குகளால் பிரேரணையினை நிறைவேற்றியிருந்தார்.

நாங்கள் 10 உறுப்பினர்கள் சபையிலிருந்து வெளியேறி உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகம் சென்று இவ்விடயம் தொடர்பில் முறைப்பாடு செய்திருக்கின்றோம்.

ஒவ்வொரு சபை அமர்வுகளிலும் உறுப்பினர்களை பேச விடாமல் தடுப்பதுடன் பேச முற்படுகின்ற உறுப்பினர்களை வெளியேற்றுவேன் என்று மிரட்டும் தொணியில் பேசுவதும் தொடர்ந்து இடம்பெறுவருகின்றன.

தவிசாளரின் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பிலும் சபையினை தவறாகவும், சட்டத்திற்கு முரணாகவும் வழி நடாத்துவது தொடர்பிலும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பல கடிதங்களை அனுப்பியிருக்ககின்றோம். இச் செயற்பாடுகள் தொடர்பில் உரிய அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாம் மக்களின் கருத்துக்களை சபையில் கதைப்பதற்கு இடம் வழங்கப்படாது தவிசாளரின் தன்னிச்சையான அடாவடித்தனமான செயற்பாடுகள் தொடருமாக இருந்தால் மக்களை ஒன்று திரட்டி வீதிக்கு இறங்குவதைத்தவிர வேறு வழியில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewspoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!
செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!

September 12, 2026
ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
Next Post
பேரணிக்கு வௌியே இருந்த ஒலிபெருக்கிகளை அகற்றிய பொலிஸார்

பேரணிக்கு வௌியே இருந்த ஒலிபெருக்கிகளை அகற்றிய பொலிஸார்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.