Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பழைய முச்சக்கர வண்டிகளை மின்சாரமாக மாற்ற அரசு புதிய திட்டம்

பழைய முச்சக்கர வண்டிகளை மின்சாரமாக மாற்ற அரசு புதிய திட்டம்

9 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பழைய எரிபொருள் முச்சக்கர வண்டிகளை மின்சார முறைக்கு மாற்றுவதற்கான விசேட வேலைத்திட்டமொன்றை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிரிஷாந்த அபேசேன தெரிவித்துள்ளார்.

மேலும், முச்சக்கர வண்டிகளின் மேற்கூரையில் சூரிய சக்தி தகடுகளை பொருத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் கிரிஷாந்த அபேசேன கூறியதாவது,

“பெற்றோலில் இயங்கும் பழைய முச்சக்கர வண்டிகளை மின்சார முறைக்கு மாற்றுவது மிகப்பெரிய நன்மையாகும். அந்த வண்டிகளைத் தொடர்ந்து பயன்படுத்த முடியும் என்பதுடன், பெற்றோலுக்கான செலவும் இல்லை. இந்த முறையில் ஒரு கிலோமீற்றருக்குச் சுமார் 5 ரூபாய் மட்டுமே செலவாகும்.

ஒருமுறை மின்னேற்றினால் சுமார் 100 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்க முடியும். வாகனத்தை மின்சார முறைக்கு மாற்றுவதற்கு சுமார் 8 லட்சம் ரூபாய் செலவாகும்” என அவர் தெரிவித்தார்.

தேசிய பொறியியல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்தினால் ஏற்கனவே புதிய மின்சார முச்சக்கர வண்டி ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், தனியார் துறையுடன் இணைந்து இதனை மேலும் மேம்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் கூறினார்.

எதிர்காலத்தில் முச்சக்கர வண்டிகளின் மேற்கூரையில் சூரிய சக்தி தகடுகளைப் பொருத்தி, அதன் மூலமே வண்டியை இயக்குவதற்கான திட்டமொன்றை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான ஆராய்ச்சிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இதன் வெற்றி நாட்டுக்கு ஒரு பெறுமதிமிக்க முதலீடாக அமையும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சாவகச்சேரி பிரதான சாலையில் அமைந்துள்ள வேப்பமரங்களை வெட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை
செய்திகள்

சாவகச்சேரி பிரதான சாலையில் அமைந்துள்ள வேப்பமரங்களை வெட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை

August 9, 2026
போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் சுதந்திரக்கட்சியின் தொகுதி தலைவர் கைது
செய்திகள்

போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் சுதந்திரக்கட்சியின் தொகுதி தலைவர் கைது

August 9, 2026
கிளிநொச்சி வங்கியில் போலி பணத்தை வைப்பிலிட வந்தவர்கள் கைது
செய்திகள்

கிளிநொச்சி வங்கியில் போலி பணத்தை வைப்பிலிட வந்தவர்கள் கைது

August 9, 2026
யாழில் வீட்டை சுத்தம் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி
செய்திகள்

யாழில் வீட்டை சுத்தம் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

August 9, 2026
சம்மாந்துறையில் கட்டாக்காலி மாடுகள் பிடிப்பு; உரிமையாளர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை
செய்திகள்

சம்மாந்துறையில் கட்டாக்காலி மாடுகள் பிடிப்பு; உரிமையாளர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை

August 9, 2026
சின்னக்கதிர்காமம் எனப்போற்றப்படும் மண்டூர் கந்திசுவாமி ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பம்
செய்திகள்

சின்னக்கதிர்காமம் எனப்போற்றப்படும் மண்டூர் கந்திசுவாமி ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பம்

August 9, 2026
Next Post
ஜார்க்கண்ட் மாநில முதல் பெண்மணி கல்பனா சொரேன்; சிறிதரன் எம்.பி. சந்திப்பு

ஜார்க்கண்ட் மாநில முதல் பெண்மணி கல்பனா சொரேன்; சிறிதரன் எம்.பி. சந்திப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு