Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இம்மாத இறுதிக்குள் வடக்கு மாவீரர் துயிலும் இல்லங்கள் விடுவிக்கப்படப்போகிறதா?; அமைச்சர் சந்திரசேகரன் வெளிப்படை

இம்மாத இறுதிக்குள் வடக்கு மாவீரர் துயிலும் இல்லங்கள் விடுவிக்கப்படப்போகிறதா?; அமைச்சர் சந்திரசேகரன் வெளிப்படை

8 months ago
in அரசியல், செய்திகள், முக்கிய செய்திகள்

வடக்கில் பாதுகாப்பு தரப்பினரின் கட்டுப்பாட்டுக்குள் காணப்படுகின்ற சில மாவீரர் துயிலும் இல்லங்களை இம்மாத இறுதிக்குள் விடுவிப்பதற்கான சாத்திய கூறுகள் தென்படுவதாக யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவரும் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டை குட்டிச் சுவராக்கிய வாங்குரோத்து அரசியல்வாதிகள் இணைந்து ஆட்சியைக் கலைக்கப்போவதாக கூக்குரல் இட்டு வருகின்றனர்.

நாட்டை 70 வருட காலத்துக்கு மேலாக சீரழித்த வரலாற்றை, எமது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மாற்றி அனைத்து இன மத மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய ஒரு தாய் நாட்டைக் கட்டி எழுப்பி வருகிறோம்.

கடந்த காலங்களில் குடும்பமாக நாட்டை சூறையாடியவர்கள் துரத்தப்பட்ட நிலையில் நேர்மையான ஒரு அரசியல் கலாச்சாரத்தை எமது அரசாங்கம் முன்னெடுத்து வருவதை சகித்துக் கொள்ள முடியாத கூட்டம் இனவாதத்தை தூண்ட முனைகிறது.

எமது அரசாங்கம் தமிழ் மக்கள் யுத்தத்தில் இறந்த மாவீரர்களை நினைவு கூறுவதற்கு எந்த தடையும் ஏற்படுத்தவில்லை .

கடந்த காலங்களில் நினைவிடங்கள் உடைக்கப்பட்ட, கொடிகள் அறுத்தெறியப்பட்ட வரலாறுகளையும் மாற்றி பூரணமாக நினைவு கூரும் உரிமையை வழங்கியது எமது அரசாங்கமே.

நாட்டின் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க பாதுகாப்பு தரப்பிடம் இருக்கின்ற துயிலும் இல்லங்களை விடுவிப்பதற்கான அறிவுறுத்தல்களை பாதுகாப்பு அமைச்சுக்கு ஏற்கனவே வழங்கியுள்ளார். அதன் அடிப்படையில் இம்மாத இறுதிக்குள் சில துயிலும் இல்லங்கள் விடுவிக்கப்படலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

அதேபோல வடக்கில் காணி விடுவிப்புகள் திட்டமிட்டபடி படிப்படியாக இடம்பெறும். அதில் விதமான தயக்கமும் இல்லை.

அண்மையில் வன்னி நிலப்பரப்பில் இராணுவத்திடம் இருந்த ஒரு பகுதி காணி விக்கப்பட்ட நிலையில் அதனை உரியவர்களுக்கு வழங்குவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக அறிகிறேன்.

எமது அரசாங்கம் நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப் பிரச்சனைக்கான தீர்வினை காண்பதற்காக புதிய அரசியலமைப்பு தொடர்பில் கவனம் செலுத்தி வருகிறது.

அதைப் பொறுக்க முடியாத சிலர் தெற்கிலும் வடக்கிலும் இருக்கின்ற நிலையில் அவர்கள் ஏதாவது குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நினைப்பில் இருக்கிறார்கள்.

அண்மையில் திருகோணமலையில் ஏற்படுத்தப்பட்ட குழப்பங்களுக்கு பின்னால் இனவாத சக்திகளின் செயற்பாடுகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகிய உள்ளது.

இவர்களின் நோக்கம் மக்களை வாழவைப்பது அல்ல தமது அரசியல் இருப்புக்களை தக்கவைத்துக் கொண்டு நாட்டை சூறையாடுவதே நோக்கம்.

இதை நான் விளாவரையாக கூற வேண்டிய தேவையில்லை. கடந்த காலங்களில் நாட்டை எப்படி ரணில் ராஜபக்சர்கள் சூறையாடினார்கள் என்பது நாட்டு மக்களுக்கு நன்கு தெரியும்.

ஆகவே எமது அரசாங்கத்தை வீழ்த்துவதாக கூறிக்கொண்டு இனங்களுக்கு இடையில் முறுகல் நிலையை தோற்றுவிப்பதற்கு வங்குரோத்து அரசியல்வாதிகள் பலவிதமான செயற்பாடுகளை செய்வார்கள். மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளையில் நேற்று இரவு பரபரப்பு
செய்திகள்

தெஹிவளையில் நேற்று இரவு பரபரப்பு

August 5, 2026
விசாரணைக்குப் பின் உதயநிதி ஸ்டாலின் விடுவிப்பு
செய்திகள்

விசாரணைக்குப் பின் உதயநிதி ஸ்டாலின் விடுவிப்பு

August 5, 2026
கொத்மலை நீர்த்தேக்க வான் கதவுகள் திறக்கப்படவுள்ளன; மக்களுக்கு எச்சரிக்கை
செய்திகள்

கொத்மலை நீர்த்தேக்க வான் கதவுகள் திறக்கப்படவுள்ளன; மக்களுக்கு எச்சரிக்கை

August 5, 2026
அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய பிரச்சனைகளுக்கு தீர்வு தேட புதிய ஆணைக்குழு நியமனம்
செய்திகள்

அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய பிரச்சனைகளுக்கு தீர்வு தேட புதிய ஆணைக்குழு நியமனம்

August 4, 2026
இலங்கை சிறைகளில் உள்ளோரின் 72% பேர் தண்டனை விதிக்கப்படாத விளக்கமறியல் கைதிகள்
செய்திகள்

இலங்கை சிறைகளில் உள்ளோரின் 72% பேர் தண்டனை விதிக்கப்படாத விளக்கமறியல் கைதிகள்

August 4, 2026
கடுமையான மதுபோதையில் பாடசாலை பேருந்தை செலுத்திச்சென்ற சாரதி கைது
செய்திகள்

கடுமையான மதுபோதையில் பாடசாலை பேருந்தை செலுத்திச்சென்ற சாரதி கைது

August 4, 2026
Next Post
வெனிசுலா வான்வெளியில் பறக்கும் அனைத்து விமானங்களுக்கு எச்சரிக்கை

வெனிசுலா வான்வெளியில் பறக்கும் அனைத்து விமானங்களுக்கு எச்சரிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.