அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தீவிர ஆதரவாளராக இருந்த குடியரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மார்ஜோரி டெய்லர் கிரீன் எதிர்வரும் ஜனவரி மாதம் தமது எம்.பி பதவியை இராஜிநாமா செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி ட்ரம்புக்கும் மார்ஜோரிக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து மோதலே இந்த இராஜிநாமா அறிவிப்பு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ஜோரியின் அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து ட்ரம்ப் அவரை ஒரு துரோகி என்று அழைத்தார்.
மார்ஜோரி, ட்ரம்ப்பின் தொடரான தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்க மறுத்ததால் அவரை மோசமானவர் என்றதோடு, ‘நான் எப்போதும் மார்ஜோரியைப் பாராட்டுவேன்.
நமது நாட்டிற்கு அவர் செய்த சேவைக்கு நன்றி கூறுவேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
‘எச்1 பி விசா’ திட்டத்தால் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பு பறிபோவதாக கூறி, அத்திட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான மசோதாவை அமெரிக்க பாராளுமன்றத்தில் கிரீன் கொண்டு வந்தார்.
இந்நிலையில், எச்1பி விசாவுக்கு ஆதரவாக ட்ரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு எம்.பி மார்ஜோரி எதிர்ப்பு தெரிவித்து கடுமையாக விமர்சித்துள்ளதோடு தமது இராஜினாமா திட்டத்தையும் அறிவித்தார்.








