Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் தொடர் மழை; வெள்ளம் ஏற்படும் அபாயத்தில் பல பகுதிகள்

மட்டக்களப்பில் தொடர் மழை; வெள்ளம் ஏற்படும் அபாயத்தில் பல பகுதிகள்

8 months ago
in காணொளிகள், செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதுடன் சில இடங்களில் போக்குவரத்துகளும் பாதிக்கப்பட்டள்ளன.

இதேநேரம் மழையுடனான காலநிலை நிலவுவதன் காரணமாக பொதுமக்களை அவதானமாக செயற்படுமாறு மட்டக்களப்பு மாவட்ட செயலகம் அறிவுறுத்தியுள்ளது.

இலங்கைக்கு தென்கிழக்கு திசையிலும் தென்மேற்கு திசையிலும் நிலவிய காற்றுச் சுழற்சிகள் இன்று (26) இரவு ஒருங்கிணைந்து ஒரு காற்றழுத்த தாழ்வு நிலையாக மாற்றம் பெற்றுள்ளதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மழையுடனான காலநிலை நிலவி வருகின்றது.

இன்று காலையில் காற்றுடனான கடும் மழைபெய்துவரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சில பிரதான குளங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் நவகிரிகுளத்தின் வான்கதவு இரண்டு அடிகள் திறக்கப்பட்டுள்ளதன் காரணமாக போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் போக்குவரத்துகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு-மண்டூர் பிரதான வீதி,பாலையடிவட்டை வெல்லாவெளி வீதி ஆகியவற்றின் ஊடாக இரண்டு அடிக்கும் மேல் வெள்ள நீர் பாய்வதனால் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதேபோன்று பொறுகாமம் ஊடாக பிரதேதேசபைக்கு இடைப்பட்ட பிரதான வீதி ஊடாக நீர் பாய்வதன் காரணமாக சிரமங்களுக்கு மத்தியில் மக்கள் பயனங்களை முன்னெடுத்துவருகின்றனர்.

இதேநேரம் கா.பொ.த.உயர்தர பரீட்சைகள் நடைபெற்றுவரும் நிலையில் இன்றைய தினம் பரீட்சை
மண்டபங்களுக்கு செல்வதற்கு மாணவர்கள் பல்வேறு கஸ்டங்களை எதிர்நோக்கியதை காணமுடிந்தது.

இதேபோன்று தொடர்ச்சியாக பெய்துவரும் கடுமையான மழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாய செய்கையும் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளது.

சூழ்நிலங்களில் உள்ள வயல்நிலங்கள் முற்றாக வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் விவசாயிகள் கடும் கவலை தெரிவித்துள்ளனர்.

இதேநேரம் காற்றுடன் கூடிய மழையுடன் கூடிய காலநிலை நிலவுவதன் காரணமாக அவதானமாக செயற்படுமாறு மட்டக்களப்பு மாவட்ட செயலகம் வலியுறுத்தியுள்ளது.

மழையுடன் கூடிய காலநிலை சில நாட்களுக்கு நீடிக்கும் நிலையுள்ளதனால் பொதுமக்களை அவதானமாக செயற்படுமாறும் கோரிக்கை விடுத்துள்ளது.

இதேபோன்று தாழ்நிலப்பகுதிகள் மற்றும் ஆற்றங்கரைகளுக்கு அண்மையில் வசிக்கும் மக்கள் வெள்ள அபாயம் நிலவும் சூழ்நிலை காணப்படுவதன் காரணமாக அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு நீர்பாசனத்திணைக்களம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

Tags: BattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சை விண்ணப்பத் தகவல் திருத்தம்; ஓகஸ்ட் 3 வரை அவகாசம்
செய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சை விண்ணப்பத் தகவல் திருத்தம்; ஓகஸ்ட் 3 வரை அவகாசம்

July 23, 2026
மத்திய கிழக்கு பதற்றம் எதிரொலி; கச்சா எண்ணெய் விலை 100 டொலரைக் கடந்தது!
செய்திகள்

மத்திய கிழக்கு பதற்றம் எதிரொலி; கச்சா எண்ணெய் விலை 100 டொலரைக் கடந்தது!

July 23, 2026
உயிர்த்த ஞாயிறு வழக்கு; கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு ஓகஸ்ட் 3 வரை ஒத்திவைப்பு!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு வழக்கு; கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு ஓகஸ்ட் 3 வரை ஒத்திவைப்பு!

July 23, 2026
வானில் பறக்கும் அதானியின் கனவு; புதிய விமான நிறுவனம் குறித்து ஆலோசனை!
செய்திகள்

வானில் பறக்கும் அதானியின் கனவு; புதிய விமான நிறுவனம் குறித்து ஆலோசனை!

July 23, 2026
சாந்த பண்டாரவின் மகனுக்கு 27ஆம் திகதி வரை விளக்கமறியல்
செய்திகள்

சாந்த பண்டாரவின் மகனுக்கு 27ஆம் திகதி வரை விளக்கமறியல்

July 23, 2026
அமெரிக்கா–சவூதியிடையே அணுசக்தி ஒப்பந்தம்
உலக செய்திகள்

அமெரிக்கா–சவூதியிடையே அணுசக்தி ஒப்பந்தம்

July 23, 2026
Next Post
ஆபத்தான வானிலை; அனைத்து மீன்பிடி படகுகளுக்கும் கடலுக்குச் செல்லத் தடை

ஆபத்தான வானிலை; அனைத்து மீன்பிடி படகுகளுக்கும் கடலுக்குச் செல்லத் தடை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.