மாவீரர் நாள் கார்த்திகை 25 ஐ முன்னிட்டு, மாவீரர் பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று கிரான் வெஸ்லி மண்டபத்தில் முன்னெடுக்கப்பட்டது. சமூக செயற்பாட்டாளர் வே. பாஸ்கரன் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
மாவீரர்களின் பெற்றோர்கள் மங்கள மேள வாத்திய இசையுடன் மரியாதையுடன் மண்டபத்திற்குள் அழைத்து வரப்பட்டனர். நிகழ்வில் வீரமரணமடைந்த உறவுகளை நினைவுகூர்ந்து அக வணக்கமும், ஈகைச் சுடர் ஏற்றலும், மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
தொடர்ந்து மாவீரர்களின் பெற்றோர்கள் சிறப்பு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் கௌரவப் பரிசுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியனேந்திரன், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மா. நடராஜா, முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் வி.ஆர். மகேஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


















