தமிழ் மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 71 ஆவது பிறந்த நாள் இன்று (நவம்பர் 26) அவரது பூர்வீக இல்லம் அமைந்துள்ள வல்வெட்டித்துறையில் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தலைமையில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றன.
நிகழ்வின் ஒரு அங்கமாக, பட்டாசுகள் கொளுத்தப்பட்டு, கேக் வெட்டப்பட்டது. அத்துடன், 71 மரக் கன்றுகள் மற்றும் இனிப்புப் பண்டங்களும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. மேலும், பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் அன்புடன் வழங்கப்பட்டு, பிறந்த தினம் சிறப்பிக்கப்பட்டது.





இந்த முக்கிய நிகழ்வில் பல பொதுமக்களும் கலந்து கொண்டு, கொண்டாட்டத்தை மேலும் அர்த்தமுள்ளதாக்கினர்.








