Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் பல பிரதேசங்களுக்கான போக்குவரத்து துண்டிப்பு- 210 பேர் உறவினர் வீடுகளில் தஞ்சம்;26 வீடுகள் சேதம்

மட்டக்களப்பில் பல பிரதேசங்களுக்கான போக்குவரத்து துண்டிப்பு- 210 பேர் உறவினர் வீடுகளில் தஞ்சம்;26 வீடுகள் சேதம்

7 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

சீரற்ற கால நிலையை அடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் அடை மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் தாழ் நிலப்பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதுடன் 8 பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 62 குடும்பங்களைச் சேர்ந்த 210 பேர் வீட்டை வெட்டு வெளியேறி, உறவினர் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளதுடன் 26 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட அனர்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது

கடந்த 21ம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பித்த மழை சீரற்ற காலநிலையால் தொடர்ந்து பெய்து வருகிறது. இந்நிலையில் மாவட்டதிலுள்ள குளங்கள் நிரம்பி வருகின்றதுடன் தாழ் நிலப் பிரதேசங்கள் வயல் நிலங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதுடன், காற்றினால் பல பிரதேசங்களில் வீதிக்கு குறுக்கே மரங்கள் முறிந்து வீழ்ந்தன. இவற்றை அந்தந்த பிரதேச பிரதேச சபையினர் வெட்டி அகற்றி வருகின்றனர்.

இதேவேளை இந்த அடைமழையை அடுத்து கிரான் தாம்போதிக்கு மேலால் வெள்ள நீர் பாய்ந்து ஓடுவதால் கிரானுக்கும் புலிபாய்ந்தகல்லுக்கும் இடையே உள்ள போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை மட்டக்களப்புபு வவுணதீவு வலையிறவு பாலம் மற்றும் மட்டக்களப்பு சுமைதாங்கி தாம்போதிகளின் மேலால் வெள்ள நீர் பாய்ந் தோடுவதால் மட்டக்களப்பு நகருக்கம் வவுணதீவுக்கும் இடையேயும் புதூருக்கும் மட்டக்களப்பு நகருக்கம் இடையிலான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு வெல்லாவெளி தாம்போதியினால் வெள்ளநீர் பாய்ந்தோடுவதால் வெல்லாவெளிக்கும் மண்டூருக்கும் இடையிலான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு திருப்பெருந்துறை பிரதேசம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதையடுத்து அந்த பகுதிக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அடை மழையால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்வதை தவிர்த்து உள்ளதுடன், வீதி போக்குவரத்துக்கள் குறைவடைந்துள்ளது. அதேசமயம் மக்களின் இயல்பு வாழ்க்கை செயலிழந்துள்ளதுடன் தொடர்ந்து காற்றுடன் அடை மழை பெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankapolice

தொடர்புடையசெய்திகள்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி; இலங்கை குடியுரிமை பெற்ற இந்தியர் கைது
செய்திகள்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி; இலங்கை குடியுரிமை பெற்ற இந்தியர் கைது

June 17, 2026
ஜி7 மேடையில் மீண்டும் எதிரொலிக்கும் உக்ரைன் போர்!
செய்திகள்

ஜி7 மேடையில் மீண்டும் எதிரொலிக்கும் உக்ரைன் போர்!

June 17, 2026
தற்போது அரசியல்வாதிகள் திருடுவதில்லை-அரச ஊழியர்களே திருடுகிறார்கள்; NPP அமைச்சர் லால்காந்த
செய்திகள்

தற்போது அரசியல்வாதிகள் திருடுவதில்லை-அரச ஊழியர்களே திருடுகிறார்கள்; NPP அமைச்சர் லால்காந்த

June 17, 2026
இலங்கை கிரிக்கட் அணியில் உள்வாங்கப்பட வேண்டிய சிறந்த வீரர் குகநாஸ் மாதுலன்; லசித் மாலிங்க
செய்திகள்

இலங்கை கிரிக்கட் அணியில் உள்வாங்கப்பட வேண்டிய சிறந்த வீரர் குகநாஸ் மாதுலன்; லசித் மாலிங்க

June 17, 2026
செம்மணிக்கு விஜயம் செய்ய நீதிமன்ற அனுமதியை கோரியுள்ள நீதி அமைச்சர் தலைமையிலான விசேட குழு
செய்திகள்

செம்மணிக்கு விஜயம் செய்ய நீதிமன்ற அனுமதியை கோரியுள்ள நீதி அமைச்சர் தலைமையிலான விசேட குழு

June 17, 2026
நளிந்த ஜயதிஸ்ஸவின் வாழைக்குலை மதில் பாய்ந்த கதையில் கோட்டா?
அரசியல்

நளிந்த ஜயதிஸ்ஸவின் வாழைக்குலை மதில் பாய்ந்த கதையில் கோட்டா?

June 16, 2026
Next Post
பெரியகல்லாறில் ஆற்றுவாய் வெட்டும் பணிகள் முன்னெடுப்பு

பெரியகல்லாறில் ஆற்றுவாய் வெட்டும் பணிகள் முன்னெடுப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு