நேற்றைய தினம் (27) அக்கரைப்பற்று மற்றும் மட்டக்களப்பு பிராந்தியங்களுக்கு ஊடாக நகர்ந்து சென்ற டிட்வா புயலானது தற்போது திருகோணமலையின் தெற்காக 40 கிலோ மீற்றர் தூரத்திற்கு அப்பால் காணப்படுகின்றது.
இது படிப்படியாக வடக்கு நோக்கி நகர்வதன் காரணத்தினால் கிழக்கு மாகாணத்தில் முக்கியமாக மட்டக்களப்பு, அம்பாறை பிரதேசங்களில் நேற்றைய தினம் நிலவிய காற்றுடனான மழை கொண்ட காலநிலை படிப்படியாக சீரடையும்.
இருந்தபோதிலும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 02ஆம் திகதிக்கு பின்னர் மீண்டும் ஒரு தாழமுக்கம் உருவாகி மழையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சிரேஷ்ட வானிலை அதிகாரி
சூரியகுமாரன்








