டிசம்பர் மாதத்திற்கான எரிபொருள் விலையில் எந்தவித மாற்றங்களும் மேற்கொள்ளப்பட மாட்டாது என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) அறிவித்துள்ளது.
அதன்படி, டிசம்பர் மாதத்திற்கான அனைத்து எரிபொருள் விலைகளிலும் மாற்றமில்லை என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜனக ராஜகருணா குறிப்பிட்டார்.
தற்போதைய எரிபொருள் விலைகள் (லிட்டருக்கு):
ஒட்டோ டீசல் – ரூ. 277
சூப்பர் டீசல் – ரூ. 318
பெட்ரோல் 92 ஆக்டேன் – ரூ. 294
பெட்ரோல் 95 ஆக்டேன் – ரூ. 335
மண்ணெண்ணெய் – ரூ. 185








