Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கிரானில் கிறவல் மண் திருடிய உல்லாச விடுதியினர்; பொலிஸில் லவக்குமார் முறைப்பாடு

கிரானில் கிறவல் மண் திருடிய உல்லாச விடுதியினர்; பொலிஸில் லவக்குமார் முறைப்பாடு

9 months ago
in காணொளிகள், செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு கிரான் பகுதியில் வீதி நிர்மாணிப்பதற்காக வீதி ஓரத்தில் வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் பொறிக்கப்பட்டிருந்த அரசுக்கு சொந்தமான கிறவல் மண்ணை, உல்லாச விடுதி ஒன்றினைச் சேர்ந்த 4 பேர் கொண்ட குழுவினர் பிக்கப் ரக வாகனம் ஒன்றில் திருடி கொண்டு சென்றவர்களுக்கு எதிராக சமூக செயற்பாட்டாளர் விமலசேன லவக்குமார் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

இதுபற்றி தெரியவருவதாவது,

கிரான் கும்புறுமூலை சந்தியில் இருந்து கடற்கரை வரையான மரமுந்திரிகை தோட்ட வீதியை, வீதி அபிவிருத்தி திணைக்களம் காப்பேற் வீதியாக நிர்மாணித்து வருகின்றனர்.

இந்த வீதி நிர்மாணிப்பின் போது வீதியின் இரு பகுதிகளையும் பாதுகாப்பதற்காக கிறவல் மண் போடப்பட்டு, செப்பனிடுவதற்காக கிறவல் கொண்டுவரப்பட்டு குறித்த வீதி ஓரங்களில் குவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குவிக்கப்பட்ட கிறவல்களை சம்பவ தினமான இன்று (04) பகல் அந்த பகுதியில் உள்ள உல்லாச விடுதி ஒன்றைச் சேர்ந்த 4 பேர் கொண்ட குழுவினர் பிக்கப் ரக வாகனம் ஒன்றில் சென்று அங்கு செப்பனிடுவதற்கு குவிக்கப்பட்டிருந்த கிறவல்களை திருடி தமது வாகனத்தில் ஏற்றியுள்ளனர்.

அந்த பகுதியில் சென்ற சமூக செயற்பாட்டாளர் வி.லவக்குமார் இதனை அவதானித்து இது அரச சொத்து இதனை திருடுவது சட்டவிரோதம் என தெரிவித்தார். இருந்தும் அதனை பொருட்படுத்தாது அவர்கள் கிறவலை திருடி தமது வாகனத்தில் ஏற்றிக் கொண்டு சென்றுள்ளனர்.

இதையடுத்து ஒரு சமூக செயற்பாட்டாளரும் பொது மகன் என்ற அடிப்படையில் அரச சொத்தை திருடிச் சென்றவர்களுக்கு எதிராக முறைப்பாடு ஒன்றை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewspoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் புதிய CEO-வாக விபுல் மிஸ்ரா நியமனம்!
செய்திகள்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் புதிய CEO-வாக விபுல் மிஸ்ரா நியமனம்!

September 9, 2026
தண்டனையைக் குறைத்து தருவதாக கூறி இலஞ்சம் வாங்கிய நீதிமன்ற உதவியாளர் கைது
செய்திகள்

தண்டனையைக் குறைத்து தருவதாக கூறி இலஞ்சம் வாங்கிய நீதிமன்ற உதவியாளர் கைது

September 9, 2026
குருக்கள்மடம் சந்தேகத்திற்குரிய மனிதப் புதைகுழி; மண் படிம பரிசோதனைக்கு நீதிமன்ற உத்தரவு!
செய்திகள்

குருக்கள்மடம் சந்தேகத்திற்குரிய மனிதப் புதைகுழி; மண் படிம பரிசோதனைக்கு நீதிமன்ற உத்தரவு!

September 9, 2026
பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை மீண்டும் 100 டொலரைத் தாண்டியது!
உலக செய்திகள்

பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை மீண்டும் 100 டொலரைத் தாண்டியது!

September 9, 2026
2029இல் அனுரவை தோற்கடித்து நானே ஜனாதிபதியாக ஆகலாம்; பத்தரமுல்ல சீலரத்ன தேரர்
அரசியல்

2029இல் அனுரவை தோற்கடித்து நானே ஜனாதிபதியாக ஆகலாம்; பத்தரமுல்ல சீலரத்ன தேரர்

September 9, 2026
இலங்கையுடன் மூன்று பாதுகாப்பு ஒப்பந்தங்கள்; ராஜ்நாத் சிங் முன்னிலையில் கைச்சாத்து!
செய்திகள்

இலங்கையுடன் மூன்று பாதுகாப்பு ஒப்பந்தங்கள்; ராஜ்நாத் சிங் முன்னிலையில் கைச்சாத்து!

September 9, 2026
Next Post
அதிவேக நெடுஞ்சாலை இலவசப் பயணம் நிறுத்தம்; கட்டண வசூல் மீண்டும் ஆரம்பம்

அதிவேக நெடுஞ்சாலை இலவசப் பயணம் நிறுத்தம்; கட்டண வசூல் மீண்டும் ஆரம்பம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு